சிங்கப்பெண்ணே: ஆனந்தி தோழியிடம் சொன்ன உண்மை… மித்ரா செய்யும் பிளாக்மெயில்… அரவிந்தனின் டார்கெட்..!

by sankaran v |
mithra, aananthi
X

mithra, aananthi

சிங்கப்பெண்ணே தொடர் விறுவிறுப்பாகச் செல்கிறது. இன்றைய எபிசோடின் சுருக்கம் இதோ…

ஆனந்தியைப் பார்க்க அவளது அப்பா, அம்மா ஊரில் இருந்து சென்னை வருகின்றனர். அவளுக்கோ அதிர்ச்சி. சொல்லாமல் கொள்ளாமல் வந்துவிட்டார்களே. நாமோ கர்ப்பமாக இருக்கிறோம் என்ன செய்வது என தெரியாமல் விழிக்கிறாள். ஒருவழியாக அவர்களை சமாளித்து விடுகிறாள்.

அதே நேரம் மெரினா பீச்சில் போய் விழுந்து தற்கொலை செய்து கொள்ளலாம். அதோடு நமது மொத்த பிரச்சனைக்கும் தீர்வு வந்துவிடும் என எண்ணுகிறாள். அன்பு, ஆனந்தி, அவளது பெற்றோர் மற்றும் தோழி ரெஜினா, காயத்ரி உள்பட பலரும் மெரினா பீச் போகிறார்கள். கடைசியில் யாரும் எதிர்பாராத நேரம் ஆனந்தி கடலுக்குள் செல்கிறாள். அப்போது அவளது தோழி ரெஜினா பார்த்து விடுகிறாள்.

உடன் அன்பு போய் காப்பாற்றி விடுகிறான். அதன்பிறகு அலை இழுத்து விட்டதைப் போல நாடகமாடி அவளது பெற்றோர் உள்பட அனைவரையும் நம்ப வைக்கிறாள் ஆனந்தி. அவளது பெற்றோரையும் பத்திரமாக கவலைப்படாதீங்க. பயப்படாதீங்கன்னு ஊருக்கு அனுப்பி வைக்கிறாள். அன்புவையும் தான் தற்கொலை செய்ய முயலவில்லை என நம்ப வைக்கிறாள்.

அதே நேரம் ரெஜினா அதைக் கண்கூடாகப் பார்த்ததால் நம்பத் தயாராக இல்லை. அதனால் ஆனந்தியை ஓங்கி அடித்து அவள் வாயாலேயே உண்மையைச் சொல்ல வைக்கிறாள். கடைசியில் ஆனந்தி தான் கர்ப்பமாக இருப்பதையும் அதனால்தான் தற்கொலைக்கு முயன்றேன் என்பதையும் சொல்லி விடுகிறாள்.

அதன்பிறகு அவளது இந்த நிலைக்கு அன்புதான் காரணம் என தோழிகள் நினைக்கின்றனர். ஆனால் ஆனந்தி அன்புக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை. யாருன்னே தெரியலன்னு கதறி அழ அவர்கள் நம்பத் தயாராக இல்லை. இதற்கிடையில் அன்புவையும், ஆனந்தியையும் போட்டுத்தள்ள அரவிந்தன் திட்டம் தீட்டுகிறான். அதற்காக அவன் போலீஸ் அதிகாரியிடம் பேரம் பேசுகிறான்.

அதே நேரம் மித்ரா ஆனந்தியிடம் உன் அப்பா அம்மாவிடம் அன்புவைக் காதலிக்கிறேன் என்று சொல்லி விட்டாயா என கேட்கிறாள். நான் இப்ப இருக்குற நிலைமையில எப்படி சொல்வேன் என அழுகிறாள் ஆனந்தி. அப்படின்னா நானே போன் பண்ணி சொல்றேன்னு பிளாக்மெயில் பண்ணுகிறாள் மித்ரா. அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Next Story