சிங்கப்பெண்ணே: மித்ராவிடம் சிக்கிய அந்த வீடியோ… ஆனந்தியின் கைகளுக்குக் கிடைக்குமா?

singappennea ananthi mithra
சிங்கப்பெண்ணே தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. ஆனந்தியின் கர்ப்பத்துக்கு யார் காரணம்? அதற்கான ஆதாரம் கொண்ட வீடியோவைத் தேடிச் செல்லும் ஆனந்திக்கு அது கிடைத்ததா என்று கதை நகர்கிறது. இனி என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.
ஆனந்தி தடயம் தேடி ரெஸ்டாரண்டுக்குப் போகிறார். அங்குள்ள மேனேஜரிடம் சிசிடிவி கேமராவின் ஃபுட்டேஜ் கேட்கிறார். அதை முதலில் இருப்பதாகச் சொன்ன அவர் கடைசியில் அது அழிந்து போய்விட்டதுன்னு சொல்கிறார். இதனால் பெருத்த ஏமாற்றம் அடைந்த ஆனந்தி அந்த இடத்திலேயே மனம் உடைந்து அழுகிறார். அதுல தான் என் வாழ்க்கையே இருக்கு என்றும் சொல்கிறார்.
இதற்கிடையில் அவளை தொடரும் மித்ரா இதை அறிந்து கொண்டு பணத்தைக் கொடுத்து அந்த ஃபுட்டேஜை வாங்கி விட்டு ஆனந்திக்குக் கிடைக்காதவாறு செய்கிறாள். அதை ஒரு பென் டிரைவில் சேகரித்து மித்ராவிடம் ரெஸ்டாரெண்ட் மேனேஜர் கொடுக்கிறான். அதை தனது பேன்ட் பாக்கெட்டில் வைத்து விட்டு ஆனந்தி ஏமாற்றத்துடன் ரெஸ்டாரண்டில் இருந்து செல்வதைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறாள்.
இதற்கிடையில் அங்கு ஆனந்தி தோழிகளுடன் வருவதை மகேஷூம் பார்த்து விடுகிறான். அவன் என்ன இந்தப் பக்கம்னு ஆனந்தியிடம் விசாரிக்கும்போது அவளது தோழிகள் பேசி சமாளித்து விடுகிறார்கள். அதே நேரம் அன்புவும், முத்துவும் ஆபீஸ் மீட்டிங்குக்கு வர மகேஷ் சொல்கிறான். அங்கு மித்ரா, அரவிந்தன், கருணாகரனும் இருக்கிறார்கள். அவர்கள் அன்புவையும், முத்துவையும் ஏளனமாகப் பார்க்கின்றனர்.
அப்போது கம்பெனியின் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்து அவர்களுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகத் தான் உங்களை வரச் சொன்னேன் என மகேஷ் சொல்கிறான். கம்பெனியின் வளர்ச்சியில் உங்களது பங்கும் இருக்கு. அதனால் தான் உங்களை வரவழைத்ததாகவும் சொல்கிறான் மகேஷ். மீட்டிங் முடிந்ததும் ஆனந்தியைத் தான் ரெஸ்டாரெண்டில் பார்த்ததாக அன்புவிடம் மகேஷ் சொல்கிறான்.

இதைக் கேட்டு அன்பு அதிர்ச்சி ஆகிறான். அவள் வேற ஒரு இடத்திற்குப் போவதாக அல்லவா சொன்னாள்? ஏன் ரெஸ்டாரெண்ட் வந்தாள் என்று குழம்பித் தவிக்கிறான் அன்பு. அதே நேரம் ஆனந்தி தோழிகளுடன் சிசிடிவி ஃபுட்டேஜ் கிடைக்காதது பற்றி பேசுகிறாள். அந்த மேனேஜர் முழியே சரியில்ல. தடயம் அங்கு தான் இருக்கு. அவர் ஏதோ கள்ளத்தனம் பண்ணுகிறார் எனவும் தோழிகளிடம் பேசுகிறாள். இதை ஜன்னலுக்கு வெளியில் இருந்து மித்ரா ஒட்டுக் கேட்கிறாள். அதை ஆனந்தி பார்த்து விடுகிறாள். இனி என்ன நடக்கும் என்பதை அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.