சிங்கப்பெண்ணே: ஆனந்தியின் கர்ப்பத்துக்கு யார் காரணம்? தொடரும் தேடுதல் வேட்டை… சிக்குவானா மகேஷ்?

by sankaran v |   ( Updated:2025-04-23 11:10:50  )
mahesh and aananthi
X

mahesh and aananthi

Singappennea: டிவி சீரியல்களில் டிஆர்பியில் நம்பர் ஒன் இடத்தைத் தொடர்ந்து தக்க வைத்து வரும் சிங்கப்பெண்ணே சீரியல் இப்போது விறுவிறுப்பாகச் செல்கிறது. இன்றைய எபிசோடின் கதைச்சுருக்கம் இதுதான்… ஆனந்தியின் கர்ப்பத்துக்கு யார் காரணம் என்ற கேள்விக்கு விடை தேடும் முயற்சியில் ஆனந்தியும், அவரது தோழிகளும் இறங்குகின்றனர். இந்தத் தேடலில் அன்பு இல்லை என்பது உறுதியாகிவிட்டது.

அதை ஒரு வீடியோ ஆதாரத்துடன் ஆனந்தி அவளது தோழிகளுக்கு நிரூபித்து விட்டாள். அதே நேரம் வேறு யாராக இருக்கும் என்ற குழப்பம் அவளுக்குள் வந்துவிட்டது. இந்த நிலையில் இவர்களை மித்ரா ஒட்டுக் கேட்டு விடுகிறாள். அப்போது அன்பு இல்லைன்னு கண்டுபிடிச்சிட்டாங்களே… அப்படின்னா மகேஷையும் கண்டுபிடிச்சிட்டா நம்ம நிலைமை என்னாவது?

இதை விடக்கூடாது என்றும் அவர்களைத் தொடர்ந்து அவர்களது செயல்களுக்கு இடையூறு கொடுத்து மகேஷை;தான் காரணம் என்று கண்டுபிடிக்காதவாறு செய்ய வேண்டும் என்று திட்டம் போடுகிறாள். அதே நேரம் ஆனந்திக்கு கனவில் கம்பெனியின் சார்பாக நடைபெற்ற வெள்ளி விழாவில் நடந்த சம்பவங்கள் வருகிறது. அதில் ஆனந்திக்கு முதல்முறையாக மயக்கம் வருகிறது.

அவளை யாரோ தண்ணீரில் மூழ்கடிக்கப் பார்க்கிறார்கள் என்றும் கனவில் இருந்து பயந்ததைத் தன் தோழிகளிடம் எடுத்துக் கூறுகிறாள். அவர்களும் அதை உறுதிப் படுத்துகிறார்கள். அப்படின்னா தப்பு அங்கே தான் நடந்துருக்கணும்னு முடிவு பண்றாங்க. ஆனந்தியும் என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்குனவன் யாருன்னு நான் பார்க்கணும்னு குமுறுகிறாள்.

அப்போது மித்ராவும், ரெஜினாவும் அந்த ரெஸ்டாரண்ட்ல சிசிடிவி கேமரா இருந்தது என்றும் அதில் இதற்கான ஃபுட்டேஜ் நிச்சயமா கிடைக்கும். அதுல பார்த்தா என்ன நடந்ததுன்னு தெரியும்னு சொல்ல அவர்கள் உடனடியாக அந்த ரெஸ்டாரண்ட் நோக்கிச் செல்கின்றனர். அவர்களை மித்ராவும் ஃபாலோ பண்ணுகிறாள். ஆனால் இதற்கிடையில் மகேஷூக்கு மித்ராவை எப்படியாவது கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்று பார்வதி தீவிரமாக முயற்சி எடுக்க அது தள்ளித் தள்ளிப்போகிறது.

மகேஷூம் எனக்கு கல்யாணம் பண்ற ஐடியாவே இல்லை என்று சொல்லி விடுகிறான். இதனால் அவனுக்கு கம்பெனியின் சார்பாக ஒரு கிளைன்ட் டிரிப்பை அவனது தந்தை ஏற்பாடு செய்கிறார். அந்த டிரிப்புக்கு மகேஷ், மித்ரா, அரவிந்தன் ஆகியோரும் வரவேண்டும் என்றும் சொல்லி விடுகிறார். அதனால் ஆனந்தியை ஃபாலோ செய்த மித்ராவின் முயற்சி வீணாகிறது. அரவிந்தன் வந்து கிளையன்ட் டிரிப்பைப் பற்றி மித்ராவிடம் கூறி காரில் ஏறச் சொல்கிறான். அடுத்து நடப்பது என்ன என்பதை நாளைய எபிசோடில் பார்க்கலாம்.

Next Story