ரஹ்மான் எப்படிப்பட்டவருனு தெரியும்..எல்லாம் பணத்துக்காக தான்! பாடகர் போட்ட பதிவு

adk
ஏ ஆர் ரகுமான் சாயிரா விவாகரத்து பிரச்சனைக்கு பிறகு ரகுமான் பற்றி பல சர்ச்சைகளும் வதந்திகளும் பரவி வருகின்றன .ஆனால் அவருடன் பழகியவர்கள் அவரைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள் ஏ ஆர் ரகுமானை தவறான நோக்கத்தில் பத்திரிகைகளை யாரும் எழுத வேண்டாம் என மிகவும் பணிவன்புடன் கேட்டு வருகின்றனர். அந்த வகையில் பிக் பாஸ் பிரபலமும் பாடகருமான ஏடிகே அவருடைய கருத்தை கூறியிருக்கிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏ ஆர் ரகுமான் மனைவி சாயிரா திடீரென ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். 29 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இருந்து விடுபட போவதாகவும் ரஹ்மானை பிரியப் போவதாகவும் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்குப் பிறகு ஒட்டுமொத்த சினிமாவும் ஒரே பரபரப்பாக இருந்தது .ஏனெனில் உலக அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான்.
அவரைப் பற்றி இதுவரை எந்த ஒரு கிசுகிசுக்களும் வதந்திகளும் வெளியானதே கிடையாது. மேடையில் பேசும்போது கூட சில வார்த்தைகள் மட்டுமே பேசுவார். யாரைப் பற்றியும் எதுவும் பேசியதும் கிடையாது. அப்படி இருக்கும் போது ரஹ்மானுக்கும் சாயிராவுக்கும் இடையே என்ன பிரச்சினையாக இருக்கும் என ரசிகர்கள் குழம்பி போயிருந்தனர்.
இதையும் படிங்க: Biggboss Tamil 8: வைல்டு கார்டு போட்டியாளர் ‘ரீ-என்ட்ரி’… ‘இதுக்கு பருத்திமூட்டை’.. ரசிகர்கள் கிண்டல்!
சாயிரா விவாகரத்து அறிவித்த மறு நாளே ரஹ்மான் ட்ரூப்பில் கிடாரிஸ்டா இருக்கும் மோகினி டேவும் அவரது கணவரை விவாகரத்து செய்ய போவதாக அறிவித்திருந்தார். இது மேலும் சர்ச்சையை கிளப்பியது. ஒரு வேளை மோகினி டேவுக்கும் ரஹ்மானுக்கும் இடையே ஏதாவது நெருக்கம் இருக்குமோ என்றெல்லாம் பத்திரிக்கைகளில் செய்தி பரவ ஆரம்பித்தது.
ஆனால் ரஹ்மானை பற்றி சின்ன குழந்தைகளுக்கே தெரியும். எந்த பெண்ணையும் நிமிர்ந்து கூட பார்க்க மாட்டார். அப்படி இருப்பவரை பற்றி இப்படி எழுதுகிறார்களே என பொங்கி எழுந்த ஏடிகே ரசிகர்களிடம் அன்பான வேண்டுகோளை கேட்டிருந்தார்.
இதையும் படிங்க: Biggboss Tamil 8: வைல்டு கார்டு போட்டியாளர் ‘ரீ-என்ட்ரி’… ‘இதுக்கு பருத்திமூட்டை’.. ரசிகர்கள் கிண்டல்!
‘அதாவது ரஹ்மான் எப்படிப் பட்டவர்னு அவருடன் வேலை பார்த்தவர்களிடம் கேட்டுப்பாருங்கள். மிகவும் உன்னதமான மனிதர். பணத்துக்காக இப்படி பத்திரிக்கைகளில் எழுதுகிறார்கள். அதற்கு ஏற்ப யாரும் கமெண்ட்களில் தவறான செய்தியை போட வேண்டாம்’ என கூறியிருக்கிறார்.