தமிழ்லயும் தொடரும் பாலியல் தொல்லை.. அசின் கோலிவுட்டே வேணானு ஏன் போனாங்க?

by Rohini |
asin
X

asin

Actress Asin: ஒட்டுமொத்த இந்திய சினிமாவுமே திரும்பி பார்க்கும் வகையில் மலையாள சினிமா பல இக்கட்டான நிலையில் மாட்டிக் கொண்டிருக்கின்றது. பாலியல் வன்கொடுமைகள் மலையாள சினிமாவில் அதிகம் நடப்பதாகவும் அதுவும் பல முன்னணி நடிகர்கள் தான் இதில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் இப்போது தெரிய வந்திருக்கிறது.

இதனால் இந்திய சினிமாவே பெரும் அதிருப்தியில் இருக்கிறார்கள். மேலும் மலையாளத்தில் ஹேமா கமிஷன் இறங்கி எப்படி தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதோ அதேபோல தெலுங்கு தமிழ் கன்னடம் என மற்ற மொழி சினிமாக்களிலும் அந்த மாதிரி ஒரு கமிட்டி வரவேண்டும் என நடிகைகள் குரல் கொடுத்து வருகின்றனர் .

இதையும் படிங்க: ரகசிய கேமரா வைத்து நடிகையை ரசிப்பார்கள்!.. பகீர் தகவலை சொன்ன ராதிகா!…

இதில் தமிழில் ஏற்கனவே சின்மயி வைரமுத்துவுக்கு எதிராக பாலியல் கொடுமைகள் தொடர்பாக சில பிரச்சனைகளை கொண்டு வந்தார். ஆனால் அவருடைய நிலைமை இப்போது என்னவாகிவிட்டது? அவருடைய வேலைவாய்ப்பு பறிபோனது. யாரும் அவருக்கு ஆதரவாக நிற்கவில்லை. இருந்தாலும் தனக்கான நியாயம் கிடைக்கும் வரை அவர் குரல் கொடுத்துக் கொண்டே தான் வருகிறார்.

இன்னுமும் பேசிக்கொண்டு தான் இருக்கிறார். இந்த நிலையில் நடிகை அசின் பற்றி அவர் கூறிய ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. எத்தனையோ பெண்கள் இதை விட்டால் நமக்கு அடுத்த் வேளை சாப்பாட்டுக்கே வழியில்லை என்ற நிலைமையில் இருப்பதால்தான் பல கொடுமைகளை தாங்கிக் கொண்டு சகித்துக் கொண்டு வருகிறார்கள்.

இதையும் படிங்க: என்னை அவமானப்படுத்தினார் எம்.எஸ்.வி! மறக்கவே மாட்டேன்! இளையராஜா சொல்றத கேளுங்க!..

பாட்டு, டப்பிங் இது மட்டும் தான் எனக்கு இருக்கிற ஒரே வழி என நான் நினைத்திருந்தால் இதை என்னால் தைரியமாக சொல்லி இருக்க முடியுமா? 15 வருஷத்திற்கு முன்பு ராதாரவி தலைவராக இருக்கும்போது என்னால் அவரை எதிர்த்து எதுவும் பேச முடியவில்லையே. ஏனெனில் அந்த ஆளு அசால்ட்டாக ரெட் கார்டை கொடுக்கிறவர்.

chinmay

chinmay

நடிகை அசினுக்கு ரெட் கார்டு கொடுத்த நாய்ங்க தானே அதுங்க. கடைசியில அசின் பண்ணது என்ன? எந்த தப்பும் பண்ணல. ஒரு ஹிந்தி படத்தில் நடித்துக் கொண்டிருந்த அசின் ஒரு பாடல் காட்சிக்காக ஸ்ரீலங்கா போக வேண்டியதாக இருந்தது. அதை எதிர்த்து இந்த ஆம்பளைங்க எல்லாம் சேர்ந்து அசினுக்கு எதிராக ரெட் கார்டு கொடுத்திருக்காங்க.

இதையும் படிங்க: குட் பேட் அக்லியில் விஜயின் டயலாக்கா? அதைவிட இன்னொரு சர்ப்ரைஸ் கோட்டில்… பரபர அப்டேட்!

இதைவிட ஒரு பைத்தியக்காரத்தனமான ஐடியா வேற எங்க இருக்க முடியும்? இந்த மாதிரி பொறுக்கி கும்பல் கையில் பவரை வச்சிக்கிட்டு இருக்க, நீ என்னடா ரெட் கார்ட் கொடுக்கிறது? நானே போறேன் என இங்கிருந்து கிளம்பி பாலிவுட்டில் தனக்கான ஒரு இடத்தை பிடித்தார் அசின். அதன் பிறகு இப்பொழுது உலகத்திலேயே நம்பர் ஒன் பணக்காரராக மாறியிருக்கிறார். ஒரு பெரிய தொழிலதிபரை திருமணம் செய்த அசின் இப்போது யாருமே தொட முடியாத அளவில் ஒரு உச்சத்திற்கு சென்று விட்டார்.

Next Story