அவரை போல யாரும் இல்லை!.. எஸ்.பி.பி பற்றி பாடகி சித்ரா சொன்ன நெகிழ்ச்சி சம்பவம்!..

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இனிமையான குரலுக்கும் மட்டும் சொந்தக்காரர் அல்ல. தலைக்கணம் இல்லாத, பொறாமை இல்லாத, அன்பான, எளிமையான, பழகுவதற்கு இனிமையான குணம் கொண்டவர். அதனால்தான் அவரை எல்லோருக்கும் பிடித்திருந்தது. அதனால்தான் அவர் மரணமடைந்தபோது தமிழ்நாடே அவருக்காக கண்ணீர் விட்டது.
பாடகர் என்பதை தாண்டி சிறந்த, நல்ல மனிதராக அவர் இருந்தார். ஆந்திராவை சேர்ந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஒரு கல்லூரி விழாவில் நடந்த பாட்டு போட்டியில் கலந்துகொண்டார். அப்போது அங்கு சிறப்பு விருந்தினராக போனவர் பின்னணி பாடகி எஸ்.ஜானகி. வேறு ஒரு மாணவருக்கு பரிசு கொடுக்கப்பட ‘அவரை விட இவர் இந்த தம்பியே அழகாக பாடினார்’ என பாலுவை சொன்னர் ஜானகி.
இதையும் படிங்க: சிவாஜி சொன்னது கண்ணதாசனுக்கு அப்படியே பலித்தது.. அட அதுவா விஷயம்?!..
அதோடு, ‘நீ சென்னை வந்து சினிமாவில் பாட வாய்ப்பு தேடு’ என சொன்னவரும் அவர்தான். துவக்கத்தில் பல இசையமைப்பாளர்கள் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. அப்போதுதான் எம்.ஜி.ஆர் தான் நடித்த அடிமைப்பெண் படத்தில் பாட அவருக்கு வாய்ப்பு கொடுத்தார். அப்படி உருவான பாடல்தான் ‘ஆயிரம் நிலவே வ.. ஓராயிரம் நிலவே வா’.
அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி ரஜினி, கமல் ஆகியோருக்கு பாட துவங்கினார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இசைஞானி இளையராஜா வந்தபின் பல பாடல்களை பாடும் பாடகராக மாறினார் எஸ்.பி.பி. தினமும் 10 பாடல்களை பாடும் அளவுக்கு பிசியான பாடகராக மாறினார்.
இதையும் படிங்க: கொடுத்து வச்ச சித்தார்த்!.. தமன்னாவை விட பால்கோவா மாதிரி இருக்காரே!.. அதிதி ராவ் அழகோ அழகு!..
இப்போதும் அவரின் பாடல்கள்தான் 70 மற்றும் 80 கிட்ஸ்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் இருக்கிறது. சினிமாவில் பாடுவது மட்டுமின்றி பல இசை கச்சேரிகளிலும் பாடுவது எஸ்.பி.பியின் வழக்கம். பின்னணி பாடகி சித்ரா ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘ஒருமுற ஒரு இசை நிகழ்ச்சிக்காக வெளிநாடு சென்றிருந்தோம்.
இரவு எஸ்.பி.பி சாருக்கு மட்டும் அறை முதலில் தயாரானது. எங்களுக்கு அறை தயாராக வில்லை. அங்கிருந்தவர்கள் ‘நீங்க போங்க சார்’ என அவரிடம் சொல்ல அவரோ ‘இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் ரூம் ரெடியான பின்னரே நான் போவேன்’ என சொல்லிவிட்டார். சொன்னது போலவே எங்கள் எல்லோரும் ரூம் ரெடியான பின்னரே அவர் அவரின் அறைக்கு போனார். அவரை போல ஒருவரை பார்க்கவே முடியாது’ என சித்ரா நெகிழ்ந்து சொன்னார்.