பாராட்டுறதுல அப்படிப்பட்ட ஆளு இளையராஜா… பாடகி ஜென்சி ஆச்சரிய தகவல்

jensy ilaiyaraja
இளையராஜாவின் இசையில் பாட்டுப் பாடினால் அந்தப் பாடகர்கள் பெரிய அளவில் பிரபலம் ஆவார்கள். அப்படிப்பட்ட பாடகர்கள், பாடகிகள் என பல பேரை உதாரணமாகச் சொல்லலாம். அவர்களில் ஒருவர்தான் பிரபல பாடகி ஜென்சி. காதல் ஓவியம், தெய்வீக ராகம், என் வானிலே ஆகிய சூப்பர்ஹிட் மெலடியைப் பாடி அசத்தியவர் பாடகி ஜென்சி. அவர் இளையராஜாவின் இசையில் பாடிய பாடல்கள் குறித்தும் அப்போது நடந்த சுவையான சம்பவங்கள் குறித்தும் என்ன சொல்கிறார்னு பாருங்க…
இளையராஜா சார் எனக்கு சோலோ சாங் நிறைய கொடுத்தாங்க என்கிறார் பாடகி ஜென்சி. சினிமா என்ற ஆசையே கிடையாது. சினிமாவுல பாடணும்கற ஆசை சொப்பனத்துல கூட வரல. மலையாளத்துல 10 படங்கள் வரை பாடல்கள் பாடினேன். தொடர்ந்து தமிழ்சினிமாவுல ராஜா சார் மியூசிக்ல பாட வாய்ப்பு கிடைச்சது.
வாய்ஸ் டெஸ்ட்டுக்கு முதலில் இளையராஜாகிட்ட ராஜா சாரோட அன்னக்கிளி படத்துல இருந்து ஒரு பாடலைப் பாடிக் காட்டினேன். அப்போ ராஜா சார் ஒண்ணும் சொல்லல. அப்படின்னா ஒண்ணும் கிடைக்காது போலன்னு நினைச்சேன். நான்கூட வீட்டுக்குக் கிளம்பிப் போயிடலாம்னுதான் அப்பாக்கிட்ட சொன்னேன். அப்புறம் ராஜா சார் வந்து மதியம் ரெக்கார்டிங் இருக்குன்னு சொன்னாரு. அப்படித்தான் வாய்ப்பு கிடைச்சது. நான் கொஞ்சம் தமிழை நல்லா உச்சரித்துப் பாடுனதுக்கு இளையராஜா சார்தான் காரணம் என்கிறார் ஜென்சி.
இப்ப உள்ள மாதிரி அப்போ எந்த ஃபீடு பேக்கும் பார்க்கற வசதி இல்லை. இப்ப யூடியூப் எல்லாமே வந்துடுச்சு. அப்போ பாடி முடிச்சதும் இளையராஜா சார் நல்லாருக்கு, நல்லாலன்னு எதுவும் சொல்ல மாட்டார். அவரு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்குறதை வச்சி நாம நல்லாதான் பாடிருக்கோம்னு தெரிஞ்சிக்க வேண்டியதுதான் என சிரிக்கிறார் பாடகி ஜென்சி. மகேந்திரன் சாருக்கு என்னோட வாய்ஸ் ரொம்ப பிடிக்கும். மெட்டி, ஜானி, முள்ளும் மலரும்னு பல படங்களில் பாடி இருக்கிறேன் என்றும் ஜென்சி சொல்கிறார்.