Connect with us
Jesudoss

Cinema History

இசை உலகைக் கலக்கிய ஜேசுதாசுக்கு வந்த மிரட்டல்… மிரட்டியது யார் தெரியுமா?

பிரபல பாடகர் ஜேசுதாஸ் ஐயப்ப பக்தர். இவர் பாடிய ஐயப்ப பக்திப் பாடல்கள் எல்லாமே செம மாஸ் ஹிட். ஐயப்பனை தாலாட்டிய பாடலான ஹரிவராசனம் இப்போது கேட்டாலும் நம்மை மெய்மறக்கச் செய்யும். இவரது இந்தப் பாடலைப் போட்டுத் தான் கோவில் நடையைத் தினமும் சாத்துவது வழக்கமாம். ஒருமுறை இவர் அந்த நேரத்தில் வரவும் பாட்டெல்லாம் போட வேண்டாம். இவரையே பாடச் சொல்லுங்கன்னு பக்தர்கள் சொன்னார்களாம்.

இவர் பாடிய பாடலுக்கு பல இடங்களில் எதிர்ப்பு வந்தது. கிறிஸ்தவ மதத்தினரைச் சேர்ந்தவர்கள் மிரட்டவும் செய்தார்களாம். அதற்கு  இந்து மதத்தைச் சேர்ந்தவர்களும் எதிர்ப்பைத் தெரிவித்தார்களாம். பெரிய கலைஞர்கள் எல்லாம் மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள்.

40 மொழிகளில் எஸ்.பி.பி. பாடினாராம். ஜேசுதாஸ் ஒரு கிறித்தவராக இருந்தாலும் அவர் ஐயப்ப பாடலைப் பாடியுள்ளார். அதை எல்லோருமே ஏற்றுக்கொண்டுள்ளனர். அந்த வகையில் மக்களுக்குப் பிடித்துவிட்டால் அவர்களே மதம் சார்ந்து பார்க்க மாட்டார்கள்.

Soorasamharam

Soorasamharam

அதனால் ஜேசுதாஸ் போன்றவர்களுக்கு சாதி, மதம், மொழி என்றும் எதுவும் தடையல்ல. ஆன்மிகம், பக்தி, மதவெறி என்ற மூன்றும் வேறு வேறு. ஆன்மிகத்திற்கு கடவுள் என்பவர் ஒருவர் தான். பக்திக்கு எந்தக் கடவுளும் தேவையில்லை. மதவெறி என்பது எந்தக் கடவுளோ அதை வைத்து லாபம் பார்ப்பான். பக்தன் யாரையும் கெடுக்க மாட்டான். ஆன்மிகவாதி ஒரு எறும்புக்குக் கூட துரோகம் செய்ய மாட்டான். மதவெறி பிடித்தவன் எதையாவது எடுத்து தன்னிடத்தைத் தக்க வைக்கலாமா என்று நினைப்பான்.

ஜேசுதாஸ் ஒரு ஆன்மிகவாதி. இயேசுவைப் பற்றியும் மலையாளத்தில் நிறைய பாடல்களைப் பாடியுள்ளார். ஐயப்பனைப் பற்றியும் பல பாடல்களைப் பாடியுள்ளார். ஆனால் அவர் புகழ்பெற்றது ஐயப்ப பாடல்களால் தான். அந்தப் பாடல் சமஸ்கிருதம்.

இளையராஜா பாடிய ஜனனி ஜனனி பாடலிலும் நிறைய சமஸ்கிருத வார்த்தைகள் உள்ளன. இந்தப் பாடலை ஜேசுதாஸ் தான் பாடுவதாக இருந்ததாம். அவர் வர காலதாமதம் ஆனதால் இளையராஜாவே பாடினாராம். அதைக் கேட்ட ஜேசுதாஸ் என்னை விட நல்லாவே பாடியிருக்கீங்க என இளையராஜாவைப் புகழ்ந்தாராம். அதேபோல சூரசம்ஹாரம் படத்தில் வரும் நான் என்பது நீயல்லவோ பாடலும் ஜேசுதாஸ் பாடுவதாகத் தான் இருந்ததாம். ஆனால் அதை அருண்மொழி பாடியுள்ளார். அதைக் கேட்டதும் ஜேசுதாஸ் அவரைப் புகழ்ந்தாராம்.

மேற்கண்ட தகவலை பிரபல சினிமா விமர்சகரும், திரை ஆய்வாளருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top