Connect with us

Cinema History

பூஜைக்கு வந்த மலரே வா…வட இந்தியப் பாடகருக்கு நிகராக திறமையை நிலைநாட்டிய தென்னிந்தியப் பாடகர்

தென்னிந்திய திரைப்படத்துறையில் இடம்பெற்ற பழம்பெரும் பின்னணிப் பாடகர், இசைக்கலைஞர். தன்னுடைய வசீகர குரலில் பாடல்களுக்கு இனிமை சேர்த்தவர். புதிய பாணியைப் புகுத்தி ரசிக நெஞ்சங்களில் குடிபுகுந்தவர். அவர் தான் பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ்.

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, உருது, ஆங்கிலம் என 12 மொழிகளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

தனது இனிய குரலால் காலத்தால் அழியாத எண்ணற்றப் பாடல்களைப் பாடி தென்னிந்திய மக்களின் இதயங்களில் நிரந்தர இடம்பிடித்தார்.

pb Srinivas2

காலங்களில் அவள் வசந்தம், மயக்கமா கலக்கமா, நினைத்ததெல்லாம் நடந்து விட்டால் ஆகிய பாடல்கள் மறக்க முடியாதவை. திரைப்படத்துறையில் சுமார் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இசைப்பணியாற்றிய அற்புத மனிதர்.

10.09.1930ல் ஆந்திராவின் காக்கிநாடாவில் பனீந்திரசுவாமி-கிரியம்மாவிற்கும் மகனாகப் பிறந்தார். இவர் பிராமணக்குடும்பத்தைச் சேர்ந்தவர். தனது தாய் ஒரு இசை ஆர்வலராக இருந்ததால் அதன் தாக்கம் இவரையும் தொற்றிக் கொண்டது.

PB Srinivas 1

இவரை ஒரு அரசுப்பணியாளராக்க விரும்பி இவரை பெற்றோர் பிகாம் படிக்க வைத்தனர். இளங்கலை பட்டப்படிப்பை முடித்த அவரை வழக்கறிஞராக்க வேண்டி சென்னை சட்டக்கல்லூரியில் சேர்த்தனர்.

ஆனால் இசையில் அவருக்கு இருந்த ஆர்வமும் ஈடுபாடும் அவரை இசைத்துறைக்கேக் கொண்டு வந்து சேர்த்தது. சட்டக்கல்வியைப் பயில்வதை விடுத்து இசைக்கல்வியைத் தேர்வு செய்தார். முறையாக சங்கீதம் பயின்றார். 1951ல் சினிமா துறையில் பின்னணிப் பாடகராக அறிமுகமானார்.

மிஸ்டர் பாரத் என்ற இந்திப்படத்தில் முதன்முதலாகப் பாடினார். பின்னர் தமிழில் ஜாதகம் என்ற படத்தில் சிந்தனை செய் செல்வமே என்ற பாடலின் மூலம் அறிமுகமானார்.

PB Srinivas

பாசமலரில் யார் யார் யார் இவர் யாரோ, பாவமன்னிப்பில் காலங்களில் அவள் வசந்தம், எதிர்நீச்சலில் தாமரைக் கன்னங்கள், மோட்டார் சுந்தரம்பிள்ளையில் காத்திருந்த கண்களே, அடுத்த வீட்டுப் பெண்ணில் கண்ணாலே பேசி பேசி கொல்லாதே, மயக்கமா, கலக்கமா…மனதிலே குழப்பமா, நினைப்பதெல்லாம் நடந்து விட்டால், ரோஜா மலரே ராஜகுமாரி போன்ற மனதில் ஒட்டும் இனிய பாடல்களைப் பாடி அசத்தினார்.

சுசீலா, ஜானகி, பானுமதி, எல்ஆர்.ஈஸ்வரி, லதா மங்கேஷ்கர் போன்றவர்களுடன் இணைந்து பாடியுள்ளார். சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி, நாகேஷ் போன்ற முன்னணி நாயகர்களுக்குப் பின்னணி பாடியுள்ளார். கர்நாடக இசை மட்டுமல்லாமல் இந்துஸ்தானி இசையிலும் வட இந்தியப் பாடகருக்கு நிகராக தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பல மொழிகளில் பாடி சிறந்த பின்னணிப் பாடகராக முத்திரைப் பதித்துள்ளார். கசல் பாடல்களை அழகாகப் பாடுவதில் பெயர் பெற்றவர். 14.4.2013 அன்று தனது 82வது வயதில் சென்னையில் காலமானார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top