Actor Vijay: கோலிவுட்டில் ஒரு வசூல் மன்னனாக கலக்கி வருபவர் நடிகர் விஜய். இவருடைய படங்களுக்கு நல்ல ஒரு ஓபனிங் இருந்து வருகிறது. இவருடைய படத்தாலேயே தங்கள் பொழப்பை ஓட்டிக்கொண்டு வரும் திரையரங்கு உரிமையாளர்கள் ஏராளம் பேர். அதனால் இவர் சினிமாவிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அரசியலில் களமிறங்கப் போகிறேன் என அறிவித்ததும் பல திரையரங்கு உரிமையாளர்கள் தயவு செய்து அதை செய்ய வேண்டாம் படத்தில் நடிங்க விஜய் என வேண்டுகோளை வைத்தனர்.
அந்த அளவுக்கு விஜயின் படங்களுக்கு ஒரு தேவை இருந்து வருகிறது. இருந்தாலும் இவர் நடித்து வரும் கோட் மற்றும் அடுத்த 69 ஆவது படம் இவற்றை முடித்துவிட்டு நேரடியாக அரசியலில் களமிறங்க காத்துக் கொண்டிருக்கிறார் விஜய். அதற்கான ஆயத்த பணிகளை சமீபகாலமாகவே செய்து வருகிறார். தனது தொண்டர்கள் சார்பாக மாணவ மாணவியர்களுக்கு உதவிகளை செய்வது மக்கள் நலப் பணிகளை செய்வது என அரசியல் சார்ந்த திட்டங்களுடன் பல உதவிகளை செய்து வருகிறார் விஜய்.
இதையும் படிங்க: விஜய்யை மட்டும் சீண்டாதீங்க!.. அவரும் அந்த நடிகர் போல விஸ்வரூபம் எடுப்பார்.. பிரபலம் பேட்டி!..
படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்த படத்திற்கான வேலைகளும் நடந்து வருகிறது. இந்த நிலையில் விஜய் பற்றிய ஒரு செய்தி இணையதளத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகின்றது. பொதுவாக விஜயின் படங்களின் ஆடியோ விழா என்றால் விஜய் என்ன பேசப் போகிறார் மறைமுகமாக யாரையாவது தாக்கி பேசுவாரா? அரசியல் சார்ந்த பேச்சும் அதில் இருக்கும் என்பதால் அவருடைய அந்த ஒரு பேச்சுக்காக காத்திருக்கும் ரசிகர்கள் ஏராளம்.
அதை சமீப காலமாக குறிப்பாக தலைவன் படத்திற்கு பிறகு வெளியாகும் ஒவ்வொரு பட ஆடியோ வெளியீட்டு விழாவிலும் நாம் பார்க்க முடிகிறது. மேடையில் தான் பேசுவது இப்படித்தான் என விஜயே சொன்ன ஒரு கருத்தை பற்றி பிகில் படத்தில் நடித்த பூவையார் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். பிகில் படத்தின் ஆடியோ வெளியிட்டீன் போது பூவையார் மேடையில் ஏறி பேசி பாடிவிட்டு கீழே வரும்போது விஜய் பூவையாரிடம் ‘எப்படி நீ எல்லாத்தையும் மறக்காம பேசுற? என்னால எல்லாம் அப்படி இருக்க முடியாது. ஸ்கிரிப்ட் எழுதி மனப்பாடம் செய்துவிட்டு போனாலும் மேடை ஏறியதும் எல்லாத்தையும் மறந்துடுவேன்.

இதையும் படிங்க: கமலுக்கு நடந்த இழப்பு! அதை சரிகட்டிய ரஜினி.. இவர்கள் நட்புக்கு ஆரம்ப விதை போட்டது இந்த சம்பவம்தானா?
அதன் பிறகு மேடையில் பேசுறது எல்லாமே என் வாய்க்கு வந்ததைதான் பேசுவேன்’ என்று அந்த நேரத்தில் கூறினாராம் விஜய். அதை இப்போது பூவையார் ஒரு பேட்டியில் கூறி இருப்பது மிகவும் வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் விஜயை கிண்டலடித்து பல கமெண்ட்களை கூறி வருகிறார்கள். மேலும் அரசியல் என்றாலே முழுவதும் மேடைப்பேச்சாத்தான் இருக்கும். அதை எப்படி சமாளிக்கப் போகிறார் விஜய் என்றும் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
