விபத்துல அந்தப் பாடகர் படுகாயம்… ஒரு மணி நேரத்துல கச்சேரி… உயிரா, பாடலா எது முக்கியம்?

kalangalil aval vasantham
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்பட 12 மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி அசத்தியவர் பின்னணிப் பாடகர் பிபி.ஸ்ரீனிவாஸ். இவரைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவருடை வெண்கலக் குரலுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. அவருடைய பாடல்கள் எல்லாமே தேனமுதம் தான்.
ஆந்திராவைச் சேர்ந்த இவர் தமிழில் பாடிய பல பாடல்கள் சூப்பர்ஹிட். இவர் பாடிய முதல் தமிழ் பாடல் ஜாதகம் படத்தில் இடம்பெற்றது. 'சிந்தனை என் செல்வமே' என்ற பாடல் தான் அது. டிஎம்எஸ். பாடல்கள் என்றால் ரசிகர்கள் சிறப்பு. மென்மையான குரல். ஆனால் புதுப்பாணி. இதுதான் பிபி.ஸ்ரீனிவாஸின் ஸ்டைல்.
'காலங்களில் அவள் வசந்தம்' என்ற ஒரு பாடலே போதும். இவரது பேரைச் சொல்ல. தமிழ்ப்படங்களில் ஜெமினிகணேசனுக்குப் பல புகழ்பெற்ற பாடல்களைப் பாடியுள்ளார். அதே போல கன்னடத்தில் ராஜ்குமாருக்கும் பாடி பெருமை சேர்த்துள்ளார்.
இவரது வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத சம்பவம் ஒன்றை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
ஒருமுறை மைசூரில் கச்சேரி நடத்துவதற்காக நண்பரோடு காரில் பிபி.ஸ்ரீனிவாஸ் சென்றாராம். அப்போது போற வழியில் பெரிய விபத்து. நண்பருக்கும், பிபி.ஸ்ரீனிவாஸ்சுக்கும் பலத்த காயம். அந்த ஊர் மக்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு டாக்டர் காயம் பலமா இருக்கு. சிகிச்சைக்கு சில மணி நேரம் ஆகும்னு சொன்னாராம்.
அப்போது எனக்கு இன்னும் 1 மணி நேரத்துல மைசூர்ல கச்சேரி இருக்குன்னு சொல்லிருக்காரு பிபி.ஸ்ரீனிவாஸ். அதுக்கு டாக்டர், உங்களுக்கு உயிர் முக்கியமா, பாட்டு முக்கியமான்னு கேட்டுள்ளார். அதற்கு பிபி.ஸ்ரீனிவாஸ் என் ரசிகர்கள் எனக்காக காத்துக்கிட்டு இருப்பாங்க. அவங்களை ஏமாற்ற விரும்பல. அதனால உயிரை விட பாட்டுதான் முக்கியம்னு சொல்ல உடனடியாக அவருக்கு சிகிச்சை அளித்தார் டாக்டர். அப்புறம் கச்சேரிக்குப் போய் அவர் பாடவும் கைதட்டல் பலமாக விழுந்தது. அந்த சந்தோஷத்தில் பிபி.ஸ்ரீனிவாஸ்சுக்கு வலி மாயமாய் போனது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.