ஏத்துக்கவே முடியாது!.. எப்படி இப்படி மனசாட்சி இல்லாம பேசுறீங்க?!.. டிவிட்டரில் பொங்கிய சைந்தவி!..
திரையுலகை சேர்ந்தவர்கள் தொடர்ந்து விவாகரத்து பெறுவது கடந்த சில வருடங்களாகவே அதிகரித்துவிட்டது. நடிகை சமந்தா தனது கணவர் நாக சைத்தன்யாவை பிரிவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதன்பின் நடிகர் தனுஷ் தனது மனைவி மற்றும் ரஜினியின் மகளுமான ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்தார்.
இப்போது தனுஷும், ஐஸ்வர்யாவும் தனித்தே வாழ்கின்றனர். இந்நிலையில்தான், இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ் தனது மனைவி மற்றும் பாடகியான சைந்தவியை பிரிவதாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. செய்திகள் கசிந்து 2 நாட்களிலேயே ஜிவி பிரகாஷ் அதை உறுதி செய்தார்.
இதையும் படிங்க: விஷால் இழுத்துட்டு ஓடுன பொண்ணு கால் கேர்ள்… ஆண்ட்ரியாவிடம் இருக்கும் 200 வைர நெக்லஸ்… பகீர் கிளப்பும் சுசித்ரா…
மனைவியை பிரிவதற்கு எந்த காரணமும் சொல்லாத அவர் ‘இது இருவரும் இணைந்து எடுத்த முடிவு. எங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்’ என ஊடகங்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும் கோரிக்கை வைத்தார். ஆனால், நடிகைகளுடன் தொடர்பு, மாமியாருடன் தகராறு என அவரின் பல காரணங்கள் சொல்லப்பட்டது.
இதில், கோபமடைந்த அவர் டிவிட்டரில் மீண்டும் விளக்கமளித்தார். ‘நான் பிரபலம் என்பதால் ஆதாரமில்லாமல் இப்படி பேசுகிறார்கள். எனது தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பு கொடுங்கள்’ என பதிவிட்டிருந்தார். ஆனாலும் யாரும் கேட்கவில்லை. பல யூடியூப் சேனல்களும், ஊடகங்களும் ஜிவி பிரகாஷின் விவாகரத்து பற்றி தொடர்ந்து எழுதி வந்தன.
இந்நிலையில், ஜிவி பிரகாஷின் முன்னாள் மனைவி சைந்தவி டிவிட்டர் பக்கத்தில் ‘நாங்கள் எங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பு கொடுங்கள் என சொன்ன பிறகும் சில யுடியூப் சேன்ல்கள் கட்டுக்கதைகளை பேசி வருவதை பார்க்கும்போது மனமுடைகிறேன். யாருடைய வற்புறுத்தலாலும் விவாகரத்து முடிவு செய்யப்படவில்லை. ஒருவரின் குணாதிசியம் பற்றி ஆதாரமில்லாமல் பேசுவதை ஏற்க முடியாது. எங்கள் இருவரின் வளர்ச்சிக்காகவே இந்த முடிவை எடுத்துள்ளோம்.
நானும் ஜிவி பிரகாஷும் பள்ளியில் படிக்கும்போதிலிருந்தே அதாவது 24 வருடங்களாக நண்பர்களாக இருந்து வருகிறோம். இது இனிமேலும் தொடரும்’ என பதிவிட்டிருக்கிறார்.