என்னது விஜய்க்கு மருத்துவ பரிசோதனையா? அப்போ முதல்வர் கனவு.. சுசித்ராவால் தளபதிக்கு வந்த ஆபத்து

Published on: May 20, 2024
vijay
---Advertisement---

Actor Vijay: தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாக இருக்கும் சுசித்ரா சமீப காலமாக பிரபலங்களை குறித்து பல சர்ச்சையான கருத்துக்களை பகிர்ந்து வரும் நிலையில் தற்போது விஜய்க்கும் சுசித்ராவால் இப்போது ஒரு பெரிய ஆபத்து வந்திருக்கிறது. தனுஷ், ஆண்ட்ரியா, த்ரிஷா, கார்த்திக் குமார், விஜய் ஏசுதாஸ் போன்றவர்களை பற்றி சுசித்ரா கூறிய பல விஷயங்கள் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் இவர் கூறியதற்கு அவர்கள் தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலும் இதுவரை வரவில்லை. அவருடைய முன்னாள் கணவரான கார்த்திக் குமார் மட்டுமே சுசித்ராவுக்கு பதிலடி கொடுத்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் சுசித்ரா கூறிய மற்றுமொரு செய்தி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது விஜய் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அவ்வப்போது கலந்து கொள்ளும் தனுஷ், திரிஷா, விஜய் ஏசுதாஸ், ஆண்ட்ரியா இவர்கள் அனைவரும் அந்த நிகழ்ச்சியின் போது போதை பொருள் பயன்படுத்துவது அதாவது கொக்கைன் போன்ற உயர்தர போதை பொருளை பயன்படுத்துகிறார்கள் என்ற ஒரு அதிர்ச்சியான செய்தியை கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: முழுக்க முழுக்க ரஜினிக்காக எழுதிய கதையில் நடித்த கமல்! யாரும் எதிர்பாராத படத்தின் ரிசல்ட்

இது திரையுலகினர் மட்டுமல்லாது ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் சமூக ஆர்வலர் வீரலட்சுமி என்பவர் விஜய், தனுஷ், ஆண்ட்ரியா, த்ரிஷா, விஜய் யேசுதாஸ், கார்த்திக் குமார் இவர்களுக்கு எதிராக புகார் மனுவை காவல்துறைையில் சமர்பித்திருக்கிறார். அதில் அவர் கூறியதாவது: போதைப்பொருள் பயன்படுத்துவதற்கு எதிராக விழிப்புணர்வு செய்யும் ஒரு இடத்தில் இருக்கும் இந்த கலைஞர்கள் இப்படி இளைஞர்களை கெடுப்பதற்கு தூண்டுகோலாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்.

Veeralakshmi
Veeralakshmi

விஜய், தனுஷ், ஆண்ட்ரியா, த்ரிஷா, விஜய் ஏசுதாஸ், கார்த்திக் குமார் ஆகியோர் என்ன மாதிரியான கொக்கைன் எந்த தேதியில் பயன்படுத்தினார்கள்? என்பதை பற்றி தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் கூறியிருக்கிறார். ஒரு பரபரப்பான இந்த செய்தியை ஊடகத்தின் முன் ஒருவர் தைரியமாக கூறுகிறார் என்றால் சுசித்ரா அந்த அளவுக்கு ஆதாரத்தை கையில் வைத்து தான் கூறியிருக்க வேண்டும். அதனால் இந்த பிரபலங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் வீரலட்சுமிஅந்த மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.

இதையும் படிங்க: மூக்குத்தி அம்மன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா? செமையா இருந்து இருக்குமே!

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.