பயில்வான் ஒரு உதவாக்கரை... ஆபாச படத்தை கொண்டு வந்ததே அவர்தான்! பொங்கிய சுசித்ரா..

by sankaran v |   ( Updated:2024-05-17 14:26:52  )
Bayilvan, Suchitra
X

Bayilvan, Suchitra

80களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் பயில்வான் ரங்கநாதன். அப்போது கவுண்டமணி, செந்தில் ஆகியோருடன் இணைந்து பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். ரஜினியின் பல சூப்பர்ஹிட் படங்களிலும் பயில்வான் வருவார்.

இவர் படவாய்ப்பு இல்லாமல் போனதும் இணையதளம் பக்கம் ஒதுங்கி விட்டார். சினிமா விமர்சனம் செய்வது, யூடியூபராக வலம் வந்து நக்கலும், நய்யான்டியும், சர்ச்சை பேச்சுகளுக்கும் ஆளாகி வருவது பயில்வான் ரங்கநாதன் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். அங்கு நடிகைகளின் அந்தரங்கம் குறித்துப் பேசுவது என பல சர்ச்சைகளில் ஈடுபட்டு வந்தார். இதனால் பல்வேறு நடிகைகளும் அவருக்குக் கண்டனம் தெரிவித்தனர்.

இதையும் படிங்க... பாகுபலி நடிகருக்கு கல்யாணமாம்… அட யாருங்க பொண்ணு… ஆச்சரியத்தில் வைரலாக்கும் ரசிகர்கள்…

கடந்த ஆண்டு பிரபல பின்னணிப் பாடகி சுசித்ரா ஒரு படி மேல் போய் காவல் நிலையத்திலேயே புகார் கொடுத்து விட்டார். இதற்கிடையில் சுசித்ரா போனில் சண்டை போட்டு பயில்வானை நாறடித்தார்.

இந்நிலையில் சமீபத்தில் யூடியூப்பில் சுசித்ரா பயில்வான் ரங்கநாதனை 'டார் டாராக' கிழித்துத் தொங்கவிட்டுள்ளார். அப்படி என்ன பேசினார்னு பார்க்கலாமா...

என்னைப்பற்றி அவர் பேச ரெண்டு காரணங்கள் உண்டு. ஒண்ணு அவர் காசு வாங்கியிருக்கணும். இல்லேன்னா என்னைப் பற்றித் தெரிந்து இருக்கணும். நான் என் வாழ்நாளில் அவரைப் பார்த்ததே இல்லை. நான் பாடகியா இருக்கும் போது அவர் சினிமாவில் இருந்துள்ளார்.

இதையும் படிங்க... இவன கூட்டிட்டு போன மீசையை எடுத்துக்குறேன்!.. எம்.ஜி.ஆரின் அம்மாவை மிரட்டிய முதலாளி…

நான் திரைத்துறைக்கு வருவதற்கு முன் அவர் ஆபாச பட ஏஜென்டாக இருந்தார். அப்போ மலையாள ஆபாசப்படங்கள் சென்னையில் எடுப்பாங்க. அதுல அவர் வேலை பார்த்தார். ஆபாச பட கலாச்சாரத்தைக் கொண்டு வந்ததே அவர் தான். சரத்குமார், ராதாரவி, சத்யராஜ், கங்கை அமரன்னு எவ்வளோ பேர் அவரிடம் சொல்லித்தான் அதைத் தடுத்து நிறுத்தினாங்க.

பயில்வான் ஒரு மாமா பையன். உதவாக்கரை. என் மேல குற்றச்சாட்டு வைத்ததால் பயில்வான் பத்திரிகையாளரே இல்லை. விஷால் கூட அவரிடம் பேச விரும்பல. அவர் ஒதுக்கப்பட்டவர் என பொங்கி எழுந்து இருக்கிறார் பாடகி சுசித்ரா.

Next Story