மனோஜ் பிச்சை எடுத்தாச்சு…இனிமே விஜயா கரைஞ்சிடுவாங்களே… வீட்டுக்கு கிளம்பிய ஸ்ருதி!...

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மனோஜ் கோவில் உட்கார்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது அங்கு வரும் மீனா அவரை கண்டுபிடித்து விடுகிறார். அவரிடம் சென்று எதுக்கு இங்க உக்காந்து இருக்கீங்க என கேட்க மனோஜ் அமைதியாகவே இருக்கிறார்.

பின்னர் முத்துவிற்கு கால் செய்து மனோஜ் இங்கு பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதாக சொல்கிறார். அவன் ஏன் அங்கு இருக்க போறான் என முத்து கேட்க இங்கதான் இருக்காரு உடனே கிளம்பி கோவிலுக்கு வாங்க எனக் கூறி மீனா போனை வைத்துவிடுகிறார்.

இதையும் படிங்க: கவுண்டமணி எப்பவுமே அப்படித்தான்!.. ஒன்னு நடக்காம போச்சி!.. ஃபீல் பண்ணி பேசும் ராமராஜன்..

கோவிலுக்கு வரும் முத்து மனோஜ் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். உனக்கு ஏன் இந்த வேலை. எத்தனை நாளா செஞ்சுகிட்டு இருக்க கேள்வி கேட்கிறார். நான் பணக்காரனாக போறேன் தடுக்காத நகரு என மனோஜ் பிச்சை எடுக்க முயற்சி செய்கிறார். அருகில் இருந்த பிச்சைக்காரர் அவர் இன்டர்ஷிப் செய்வதாக கலாய்க்கிறார்.

பின்னர் எதோ வேண்டுதலுக்கு வந்ததாக உண்மையை சொல்கிறார். பின்னர் அவரை இழுத்துக்கொண்டு முத்து வெளியேற உன்னுடைய டிரஸ் எங்கே என கேட்கிறார். அது பார்த்து நண்பரிடம் இருப்பதாக கூற அவருக்கு கால் செய்தால் எடுக்கவில்லை. இதனால் பிச்சைக்காரனுடைய வீட்டிற்கு அழைத்து செல்கிறார்.

அடுத்ததாக கோவமாக வீட்டிற்கு வரும் ஸ்ருதி சோபாவில் தன்னுடைய பையே இருந்துவிட்டு அங்கு நடந்ததை கூறுகிறார். அந்த முத்து தான் செஞ்சிருப்பான் என அவர் அப்பா கூற நீங்க ஏன் செஞ்சிருக்க கூடாது என்கிறார். அவர் உங்களை அடிச்சது தப்பு தான். அதுப்போல நீங்க மீனாவை பேசுனதும் தப்புதான்.

இதையும் படிங்க: நான் அப்பவே இறந்திருப்பேன்! உருக்கமாக பேசிய ராமராஜன்.. இப்படியெல்லாம் நடந்திருக்கா

ரவி ரெஸ்டாரெண்டில் இருக்கான். நான் எங்க வீட்டுக்கு போறேன் எனக் கிளம்பிவிடுகிறார். வீட்டில் விஜயா மற்றும் அண்ணாமலை அமர்ந்திருக்க அப்போ மனோஜை அழைத்து கொண்டு அங்கு வருகிறார். இதை பார்த்து விஜயா கடுப்பாகி விடுகிறார். மனோஜ் எனத் தெரியாமல் உனக்கு கை, காலு நல்லா தானே இருக்கு என்கிறார். முத்து தேவையில்லாமல் பேசாதீங்க.

அப்புறம் வருத்தப்படுவீங்க என விஜயா வாயை அடக்க முயல்கிறார். பின்னர் மனோஜ் துண்டை விலக்கி நான் தான் எனக் கூற விஜயா அதிர்ச்சி அடைகிறார். அப்போ ரோகினி வந்து யார் இது எனக் கேட்க மனோஜ் என்றதும் அதிர்கிறார். பின்னர் அருகில் போக பார்லர் அம்மா அவன் அந்த காஷ்ட்யூமையே பிச்சைக்காரனிடம் தான் வாங்கிருக்கான். உஷாரா இரு எனக் கூற அவர் தள்ளி நிற்கிறார்.

அண்ணாமலை எதுக்குடா இப்படி எனக் கேட்க கனடா வேலைக்கு போணும் எனக் கூற பிச்சை எடுத்தே சேர்த்துருவியா என்கிறார். இல்லை ஒருநாள் பிச்சை எடுத்தா நான் நினைச்சது நடக்கும் என சாமியார் சொன்னதாக கூறுகிறார். இதை கேட்டு விஜயா அதிர்ச்சி அடைவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

இதையும் படிங்க: பாக்கியாவுக்கு அடுத்த சோதனையா? மீண்டும் ஆரம்பிக்கும் இனியா மற்றும் எழில் பிரச்னை!…

 

Related Articles

Next Story