அசிங்கப்பட்ட விஜயா… ரோகிணி நல்ல ட்ரை பண்ணுறீங்க போல… தெளிவா இருக்கீங்க ஸ்ருதி…
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ஸ்ருதி மற்றும் மீனா டீ குடித்து கொண்டு இருக்கின்றனர். அப்போ அங்கு வருகிறார் ரோகிணி. நீங்க இவ்வளோ சீக்கிரமா வருவீங்கனு நினைக்கலை என்கிறார் ரோகிணி. அதற்கு ஸ்ருதி ஏன் நாங்க வந்தது பிடிக்கலையா எனக் கூறுகிறார்.
இல்ல, இல்ல. முத்து வந்து மன்னிப்பு கேட்டு வருவாங்கீங்கனு நினைச்சேன் என்கிறார். உடனே மீனா அவர் ஏன் மன்னிப்பு கேட்கணும். அவரும் என்னை பத்தி பேசுனதால தான் அடிச்சாரு. அவர் மன்னிப்பு கேட்டாரா என்கிறார். என்ன ஸ்ருதி, மன்னிப்பு கேட்க சொல்றாங்க எனக் கேட்க ஆமாம் அப்பாவும் தப்பு செஞ்சிருக்காருல.
இதையும் படிங்க: உங்களை திட்டுபவர்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?!.. கேப்டன் விஜயகாந்த் சொன்ன கூல் பதில்!…
முத்து மேல கோபம் போச்சா தெரியலை. அவர் கேரக்டர் அதானு புரிஞ்சிக்கிட்டேன். மீனாவுக்காக அவர் செஞ்சதை மன்னிச்சிட்டேன் எனக் கூறிவிடுகிறார். மீனாவும், முத்துவும் தான் நிறைய சண்டை போட்டு இருக்காங்க என்கிறார். அப்படி பண்ணாதான் நிறைய புரிதல் இருக்கும். ஏன் நீங்க சண்டை போட்டதில்லை என்கிறார் ஸ்ருதி. இல்லையே என ரோகிணி கூற அப்போ மனோஜ் ஏன் மாடிக்கு போனார் என்கிறார்.
அது சும்மா ஆர்குமெண்ட் என ரோகிணி இழுக்க அதுவும் ஃபைட் தான் என்கிறார் ஸ்ருதி. இதையடுத்து மாடியில் மனோஜ் மற்றும் ரவி புலம்பிக்கொண்டு இருக்கின்றனர். பின்னர் ரோகிணி மற்றும் ஸ்ருதி தங்கள் கணவன்மார்களை போன் பண்ணி ரூமுக்குள் அழைக்கின்றனர். ஆனால் மீனா கால் பண்ணாமல் இருக்க முத்து போன் செய்து பேசி சிரித்து கொண்டு இருக்கின்றனர்.
இதையும் படிங்க: பாக்கியா வீட்ல விசேஷங்க… இப்டியா காப்பி அடிப்பீங்க… ஈஸ்வரி என்ன சொல்லுவாங்களோ!
பின்னர் சுதா விஜயாவிடம் வந்து பேசிக்கொண்டு இருக்கின்றார். அவ வரமாட்டேனு தான் சொன்னா, நான் தான் சொல்லி அனுப்பி வச்சேன் என்கிறார். பின்னர் பூ கேட்டு ஆள் வர விஜயாவை முழம் போட்டு கொடுக்க சொல்கிறார். இதை பார்க்கும் சுதா அவரை கலாய்க்க தொடங்குகிறார். ரோகிணிக்கு செம சந்தோஷமாகி விடுகிறது. நான் வெளியில் பூ வாங்கணும். நீங்களே கொடுங்க என்கிறார்.
விஜயாவிடம் முழம் போட்டு வாங்கி செல்கிறார். வழியில் ஸ்ருதியை பார்ப்பவர் உனக்கு நம்ம வீடு இருக்கு மறந்துராத எனச் சொல்லிவிட்டு செல்கிறார். வீட்டில் இருக்கும் விஜயா, ரோகிணியிடம் புலம்பி தள்ளுகிறார். நம்ம மீனா கடை குறித்து கார்ப்ரேஷனில் கம்ப்ளையண்ட் செய்யலாம். அவங்க வந்து தூக்கிட்டு போயிடுவாங்க என ஐடியா கொடுக்கிறார் ரோகிணி. இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.