வில்லத்தனம் செய்த விஜயா-ரோகிணி… மொத்தமாக போன மீனாவின் கடை… கடுப்பில் முத்து!...

by Akhilan |
வில்லத்தனம் செய்த விஜயா-ரோகிணி… மொத்தமாக போன மீனாவின் கடை… கடுப்பில் முத்து!...
X

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் கடுப்பில் இருக்கும் விஜயா பார்வதிக்கு போன் செய்து எதுவும் ஐடியா இருக்கிறதா என கேட்க முடிவு செய்கிறார். ஆனால் அப்படி கேட்கும் போது இங்கு நடந்தவற்றை சொல்ல வேண்டும் என்பதால் செய்த காலை கட் செய்து விடுகிறார்.

பின்னர் பார்வதி கால் செய்ய என்னென்னவோ உளறி அந்த காலை மீண்டும் கட் செய்து விடுகிறார். இதனால் பார்வதி அங்கு நடந்தவற்றை தெரிந்து கொள்ள உடனே ரோகினிக்கு கால் செய்கிறார். ரோகினியும் ஸ்ருதியின் அம்மா சொன்னவைகளை அனைத்தையும் பார்வதியிடம் உளறி விடுகிறார்.

இதையும் படிங்க: ஒரு செகண்ட் தலையே சுத்திடுச்சு!.. கங்குவா ஹீரோயின் டிரெஸ் போட்டுத்தான் இருக்காரான்னு டவுட்டே வருதே!

இதைக் கேட்டு கடுப்பான விஷயம் அவகிட்ட ஏன் சொன்ன அவளும் என்னை கலாய்ப்பா என்கிறார். மீனாவின் கடை இருப்பதால்தான் இந்த பிரச்சினை. கார்ப்பரேஷனில் அனுமதி வாங்கி இருக்க மாட்டாங்க. நாம ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்தா கடையை எடுத்துட்டு போயிடுவாங்க என ஐடியா கொடுக்கிறார் ரோகிணி.

விஜயாவும் ஓகே சொல்லிவிட ரோகிணி கம்ப்ளைன்ட் செய்து விடுகிறார். விடிந்ததும் கார்ப்பரேஷனில் இருந்து ஆள் வந்து அந்த கடையை எடுத்து சென்று விடுகின்றனர். அந்த நேரத்தில் அங்கு வரும் மீனா எதற்காக என் கடையை காலி செய்கிறீர்கள் என கேட்க அனுமதி வாங்கவில்லை. அதனால் புகார்கள் வந்திருப்பதாக சொல்லி கடையை எடுத்துச் சென்று விடுகின்றனர். இதை விஜயா மற்றும் ரோகிணி மாடியில் இருந்து பார்த்து சந்தோஷம் கொள்கின்றனர்.

இதையும் படிங்க: கலெக்‌ஷனை அள்ளுமா கவின் படம்!.. தமிழ் சினிமாவை தலை நிமிர வைப்பாரா டாடா?.. ஸ்டார் ரிலீஸ் தேதி இதோ!..

வீட்டிற்கு வரும் முத்து எங்கள் மீனா கடை எங்க போச்சு என்ன ஆச்சு என கேட்கிறார். அப்பொழுது மீனா நடந்தவைகளை சொல்லி அழுது புலம்புகிறார். இது அந்த எதிர்த்த வீட்டுக்கார வேலைய தான் இருக்கும். அனுமதி வாங்கி கடையை எடுக்கலாம் என முத்து கூற அது கஷ்டம் என்கிறார் அண்ணாமலை.

விஜயா மற்றும் ரோகிணி தெனாவட்டாக அமர்ந்து இருக்க அதை பார்த்து எதோ குடும்பம் கலச்சி தான் இந்த வேலையை பார்த்து இருக்கும் என்கிறார் முத்து. இதனால் இருவரும் பதறுகின்றனர். என்னை ஏன் பார்க்கிற நான் எதுவும் சொல்லலை என விஜயா எழுந்து ரூமுக்குள் சென்றுவிட அங்கு ரோகிணி வர இருவரும் சிரித்து கொள்கின்றனர். இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

Next Story