கடை போனதால் புலம்பும் மீனா… சமாதானம் செய்யும் முத்து… சந்தோஷத்தில் விஜயா!
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மீனா மொட்டை மாடியில் நின்று அழுதுக்கொண்டு இருக்கிறார். அப்போ அங்கு ஹோட்டலில் சாப்பாட்டுடன் வருகிறார் முத்து. மீனா சாப்பிட மறுத்துவிடுகிறார். வாழ்க்கையே இருண்டு போன மாதிரி இருக்கு என புலம்புகிறார்.
எனக்கு நீங்க முதன் முதலாக வச்சி கொடுத்த கடை. அதை என்னால பார்த்துக்க முடியலை என்கிறார். கார்ப்ரேஷன் காரன் தூக்கிட்டு போனதுக்கு நீ என்ன செய்வ என சமாதானம் சொல்லி ஊட்டி விடுகிறார். நான் நிறைய கஷ்டங்களை பார்த்து இருக்கேன்.
இதையும் படிங்க: ஒரு வழியா ஓடிடிக்கு வரும் மஞ்சுமெல் பாய்ஸ்!.. எந்த தளத்தில் எந்த தேதியில் வருது தெரியுமா?..
அதுமாதிரி நாமளும் வாழ்க்கையில் ஜெயிக்கலாம். கவலைப்படாதே என சமாதானம் சொல்கிறார். அடுத்தநாள் காலையில் மீனாவை விஜயா திட்டிக்கொண்டு இருக்கிறார். என்ன இன்னும் காபி கொடுக்கலை என மனோஜ் மற்றும் ரோகிணியும் அங்கு வருகின்றனர். அப்போ மீனா மாடியில் இருந்து இறங்கி வருகிறார். நீ ஏன் மாடிக்கு தூங்க போன எனக் கேட்க எங்க தூங்குனா என்ன அத்தை என்கிறார்.
எல்லாரும் வேலைக்கு போணும் தானே? என விஜயா கேட்க இன்னைக்கு ஒருநாள் வேற யாரும் போட கூடாதா என்கிறார் மீனா. எல்லாரும் வேலைக்கு போறாங்க.அப்போ நான் மட்டும் தான் வெட்டியா இருக்கேனு சொல்றீங்களா அத்தை என்கிறார் மீனா. ஆமா என்கிறார் விஜயா. அப்போ அங்கு வரும் முத்து, ஏன் மீனா தான் காபி போடணுமா? யாருக்கு என்ன தேவையோ? அவங்களே செஞ்சிக்கோங்க என சத்தம் போடுகிறார்.
இதனால் கடுப்பான விஜயா நீ போய் தூங்கு நாங்களே பாத்துக்குறோம். உங்க மாமாவையும் அவரையே போட்டுக்க சொல்றோம் என்கிறார். இதனால் மீனா ஒன்னும் வேண்டாம். நான் தானே வெட்டியா இருக்கேன். நானே போய் போடுறேன் எனக் கூறி செல்கிறார்.
இதையும் படிங்க: ரோமியோவை அன்பே சிவம் ஆக்கிடாதீங்க!.. புளூசட்டமாறன் செஞ்ச வேலையில் கடுப்பான விஜய் ஆண்டனி..
ஷெட்டுக்கு வரும் முத்து தன் நண்பர்களிடம் மீனாவின் கடை போன விஷயத்தினை கூறுகிறார். அப்போ நண்பர் ஒருவருக்கு கால் வர ஆன்லைனில் ஆர்டர் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார். உடனே முத்துவுக்கு மீனாவுக்கு ஒரு ஸ்கூட்டி வாங்கி கொடுக்கலாமா எனப் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.
பின்னர் நண்பர்களிடம் காசினை வாங்கிக்கொண்டு சென்று மீனாவுக்கு பிடித்த கலரில் வண்டியை வாங்கி கொண்டு வருகிறார். பின்னர் வீட்டில் இருப்பவர்களுக்கு கால் செய்து கீழே வரும்படி கூறுகிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.