மீனாவை திருடியாக்கி பிளானை சாதித்த ஸ்ருதி பெற்றோர்.. என்ன நடக்க போகுதோ?
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ரோகினி வீட்டுக்கு சென்றால் என் மாமியார் என்ன பண்ணுவாங்கனே தெரியலை என வித்யாவிடம் பேசிக்கொண்டு இருக்கிறார். இனி முத்துவால பிரச்னை வர வாய்ப்பே இல்ல வித்யா கூற வீட்டுக்கு போறதுக்குள்ள எதாவது பெருசா நடக்கணும் என்கிறார்.
அந்த நேரத்தில் திருஷ்டி சுத்த ரோகினியை கூப்பிட்டு வரச்சொல்ல மீனா போய் அத்தை கூப்பிடுவதாக அழைக்கிறார். திருஷ்டி கழிக்கவே கூப்பிடுவதாகவும் சொல்லி செல்கிறார். இதனால் கொஞ்சம் நிம்மதியுடன் இறங்கும் ரோகினிக்கும், ஸ்ருதிக்கும் திருஷ்டி சுத்தி போடுகின்றனர்.
இதையும் படிங்க: இனிமே என் வாழ்க்கையில அந்த தப்பை மட்டும் பண்ணவே மாட்டேன்!.. விஜய் தேவரகொண்டா ரொம்ப பட்டுட்டாராம்!..
ஸ்ருதி தன் நகை மற்றும் மாலையெல்லாம் கழற்றி போட்டுவிட்டு ரவியை அழைத்துக்கொண்டு வெளியில் செல்கிறார். பின்னர் ஸ்ருதி அம்மா ஏற்பாடு செய்த ஆட்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறார். அவனை கோபப்படுத்தவே முடியாது. என்ன பண்ணாலும் சிரிச்சிக்கிட்டே இருக்கான் என்கின்றனர். அப்போ வேற ஐடியா இருக்கு முத்து மற்றும் அண்ணாமலையை சாப்பிட உட்கார வைத்து அசிங்கப்படுத்தலாம் என்கின்றனர்.
பின்னர் ஸ்ருதி அம்மா முத்து, அண்ணாமலை சாப்பிட உட்கார்ந்துட்டாங்க. இப்போ நடுவில் போய் அவங்களை எழுப்பலாம் என அங்கு போகின்றனர். ஆனால் ஏற்கனவே அவர்கள் இருவரும் எழுந்து குழந்தைகளை உட்கார வைத்து பரிமாறிக்கொண்டு இருக்கின்றனர். இதனால் அந்த பிளானும் மொக்கை வாங்கிவிடுகிறது. பார்வதி மீனாவை அழைத்து ஸ்ருதியை கூப்பிட சொல்கிறார்.
இதையும் படிங்க: பத்மபூஷன் விருதை நிராகரித்த பாடகி எஸ்.ஜானகி… கெத்து இருந்தாதான் இப்படி காரணம் சொல்ல முடியும்!
மீனா ரூமுக்குள் செல்ல ஸ்ருதி இல்லாமல் போகிறார். மாலையில் ஒரு செயின் சிக்கி இருப்பதை பார்த்து இப்படியே போட்டுட்டு போயிருக்காங்க எனச் சொல்லிக்கொண்டு அதை எடுக்கிறார். அந்த நேரத்தில் அங்கு வரும் வாசுதேவன் மீனாவை திருடி என பழி சுமத்துகிறார். இதனால் மீனா கலங்கி போகிறார். உடனே ஓடிப்போய் முத்துவை கட்டிக்கொண்டு அழுகிறார்.
அங்கு வரும் வாசுதேவன் அண்ணாமலையிடம் செயினை திருடியதாக சொல்கிறார். இதை கேட்டு கடுப்பாகும் அண்ணாமலை மீனா அந்த மாதிரி பொண்ணு இல்ல என சப்போர்ட் செய்கிறார். உங்களுக்கு இதான் வேலையா திருடுறதுக்கு தான் வந்தீங்களா என ஓவரா பேசிக்கொண்டே செல்கிறார். முத்துவின் கோபமாக அமைதியாக இருங்க. விசாரிக்கிறேன் என மீனாவிடம் கேட்பதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.