Connect with us

Cinema News

இனிமே என் வாழ்க்கையில அந்த தப்பை மட்டும் பண்ணவே மாட்டேன்!.. விஜய் தேவரகொண்டா ரொம்ப பட்டுட்டாராம்!..

விஜய் தேவரகொண்டா நடிப்பில் விரைவில் ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. 34 வயதாகும் விஜய் தேவரகொண்டா இதுவரை சுமார் 20 படங்களில் நடித்துள்ளார். கடைசியாக சமந்தாவுடன் நடித்து வெளியான குஷி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

சுமார் 50 கோடி அளவுக்கு அந்த படம் வசூல் ஈட்டிய நிலையில் சற்றே சந்தோசப்பட்டார் விஜய் தேவரகொண்டா. சமந்தா சோலோவாக நடித்து வெளியான யசோதா திரைப்படமே 50 கோடி ரூபாய் வசூல் ஈட்டிய நிலையில், இந்தப் படம் பெரிய வெற்றி இல்லை என விமர்சிக்கப்பட்டது.

இதையும் படிங்க: மத கஜ ராஜா படம் ரிலீஸ் ஆகாம இருக்க என்ன காரணம்?.. முதல் முறையாக வாய் திறந்த சுந்தர். சி!..

அதற்கு முன்னதாக பாலிவுட்டில் அனன்யா பாண்டேவுடன் இணைந்து நடித்த லைகர் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. ஃபேமிலி ஸ்டார் திரைப்படத்தில் மிருணாள் தாகூர் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்துள்ளார்.

கீதகோவிந்தம் படத்தை இயக்கிய பரசுராம் இந்த படத்தை இயக்கியுள்ளார். அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய விஜய் தேவரகொண்டா, அறிமுக இயக்குனர்களை நம்பி இனிமேல் எந்த ஒரு படத்திலும் நடிக்க மாட்டேன் என்றும் குறைந்தபட்சம் ஒரு படத்தையாவது என்னை இயக்க ஆசைப்படும் இயக்குநர்கள் இயக்கி இருக்க வேண்டும் அப்போதுதான் அவர்களை நம்பி படம் பண்ண முடியும் எனக்கூறியுள்ளார்.

இதையும் படிங்க: காதலருடன் காருக்குள்ள!.. சிக்கிய பூஜா ஹெக்டே!.. வைரலாகும் வீடியோ.. அந்த டிவி நடிகரா?..

விஜய் தேவரகொண்டாவுக்கு அறிமுக இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா தான் அர்ஜுன் ரெட்டி என்னும் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்தது என்றும் அறிமுக இயக்குநர்களை ஒரு முன்னணி நடிகர் கேவலமாக பேசுவது தவறான செயல் என பலரும் விஜய் தேவரகொண்டா கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து, படங்கள் தோல்வி அடைகிற பயத்தினால் தான் இப்படி சேஃப்டியாக இருக்கப் பார்க்கிறார் விஜய் தேவரகொண்டா என்றும் கூறுகின்றனர்.

கீதா கோவிந்தம் படத்தை இயக்கிய பரசுராமை நம்பி மகேஷ் பாபு கால்ஷீட் கொடுத்தார். ஆனால், சர்காரு வாரி பாட்டா எனும் மொக்கைப் படத்தை அவர் இயக்கிய நிலையில், விஜய் தேவரகொண்டா ஃபேமிலி ஸ்டார் படம் மட்டும் சொதப்பாது என்பது என்ன நிச்சயம் என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

இதையும் படிங்க: ஜோதிகா நடித்த படத்தை பார்த்து கண்கலங்கிய ரஜினி! அந்தப் படத்துக்கா இவ்ளோ எமோஷன்?

google news
Continue Reading

More in Cinema News

To Top