மத கஜ ராஜா படம் ரிலீஸ் ஆகாம இருக்க என்ன காரணம்?.. முதல் முறையாக வாய் திறந்த சுந்தர். சி!..

அரண்மனை 4 படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதை முன்னிட்டு பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்ற நிலையில், இயக்குநர் சுந்தர். சி பத்திரிகையாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

அரண்மனை 4 படத்தில் விஜய்சேதுபதி நடிக்காமல் போனது ஏன் என்கிற கேள்விக்கு கால்ஷீட் பிரச்சனை தான் காரணம் என்றும் விஜய்சேதுபதி நடிக்காத நிலையில், தான் நான் ஹீரோவாக இதில் நடிச்சிருக்கேன் என்றும் சுந்தர். சி பதில் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: காதலருடன் காருக்குள்ள!.. சிக்கிய பூஜா ஹெக்டே!.. வைரலாகும் வீடியோ.. அந்த டிவி நடிகரா?..

பேய் படத்தில் கிளாமர் பாடல்கள் எதற்கு என்கிற கேள்விக்கு, பேய் படங்கள் என்றால் கோராமையாக இருக்க வேண்டும் என நான் நினைக்கவில்லை. பேயா இருந்தாலும் தமன்னா, ராஷி கன்னா, ஹன்சிகா மாதிரி அழகா இருக்கட்டுமே என அழகியலை வைத்துத்தான் என் படங்களை இயக்கி வருகிறேன் என அந்த கேள்விக்கும் பதிலளித்தார்.

மத கஜ ராஜா படம் முழுதாக எடுத்து ரிலீஸ் ஆகவேண்டிய சமயத்தில் அப்படியே ரிலீஸ் ஆகாமல் 10 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்க என்ன காரணம் என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. 2013ம் ஆண்டு விஷால், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி நடிப்பில் சுந்தர். சி இயக்கிய மத கஜ ராஜா படம் வெளியாகாமல் இருக்க காரணமே அந்த படத்தின் தயாரிப்பாளர் தான். அவருடைய முந்தைய படத்தில் ஏற்பட்ட கடன் காரணமாக இந்த படத்தை ரிலீஸ் செய்யாமல் விட்டு விட்டார்.

இதையும் படிங்க: ஜோதிகா நடித்த படத்தை பார்த்து கண்கலங்கிய ரஜினி! அந்தப் படத்துக்கா இவ்ளோ எமோஷன்?

நானும், விஷாலும் எவ்ளோவோ கெஞ்சிப் பார்த்துட்டோம். அந்த படத்தை நாங்களே வாங்கி ரிலீஸ் செய்கிறோம் என்று அதற்கு கூட அவர் சம்மதிக்கவில்லை. அவரது ஆபிஸ் தி. நகரில் தான் இருக்கு என் சார்பாக நீங்களே போய் கேட்டுப் பாருங்க என சொல்லி விட்டார்.

இப்போ அந்த படம் வந்தாலும், கமர்ஷியலாக ஹிட் அடிக்கும். அந்தளவுக்கு காமெடி காட்சிகள் மத கஜ ராஜா படத்தில் இடம்பெற்றுள்ளது என சுந்தர். சி அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.

 

Related Articles

Next Story