காதலருடன் காருக்குள்ள!.. சிக்கிய பூஜா ஹெக்டே!.. வைரலாகும் வீடியோ.. அந்த டிவி நடிகரா?..
நடிகை பூஜா ஹெக்டே தனது காதலருடன் காருக்குள் இருக்கும் வீடியோ இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது. மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா பேட்மேன் போல நடித்த முகமூடி படத்தில் தான் முதன்முறையாக பூஜா ஹெக்டே அறிமுகமானார். ஆனால், அவருக்கு முதல் படம் தோல்விப் படமாக அமைந்தது.
அதன் பின்னர், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடிக்க ஆரம்பித்த பூஜா ஹெக்டேவுக்கு பெரிய வெற்றிக் கிடைக்க பல ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. அல்லு அர்ஜுன் உடன் இணைந்து பூஜா ஹெக்டே நடித்த படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன.
இதையும் படிங்க: இந்திரஜா சங்கர் திருமண ரிசப்ஷன்!.. கமல்ஹாசன், ராமராஜன், சிவகார்த்திகேயன் என திரண்ட திரையுலகம்!..
அதிலும், அலாவைகுந்தபுரமுலோ திரைப்படத்தில் புட்டபொம்மா பாடல் மெகா ஹிட்டான நிலையில், பூஜா ஹெக்டேவுக்கு தொடர்ந்து டோலிவுட், கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், மீண்டும் அவர் வாழ்க்கையில் விதி விளையாடியது.
விஜய்யுடன் பூஜா ஹெக்டே நடித்த பீஸ்ட் படம் செம ஃபிளாப் ஆகி ட்ரோல் மெட்டீரியலாக மாறியது. ராம்சரணுக்கு ஜோடியாக ஆச்சார்யா படத்தில் நடித்திருந்தார் அந்த படமும் படுதோல்வி. பிரபாஸ் நடிப்பில் வெளியான ராதே ஷ்யாம் எனும் பிரம்மாண்ட படத்திலும் பூஜா ஹெக்டே தான் ஹீரோயின். அந்த படத்தின் நிலைமையும் டிசாஸ்டர் தான்.
இதையும் படிங்க: இனிமே லாரன்ஸ் மகன் வந்து அதை செய்யப்போறான்!.. 20 வருஷத்துக்கு முன்னாடி போட்ட விதை.. இன்று மரமாக!..
கடைசியாக பாலிவுட் பக்கம் சென்ற பூஜா ஹெக்டேவுக்கு சல்மான் கான் அஜித்தின் வீரம் படத்தை இந்தியில் ரீமேக் செய்து நடித்த கிஸி கா பாய் கிஸி கி ஜான் படத்தில் ஹீரோயினாக நடித்தார். பாலிவுட் பக்கம் போனாலும் பூஜா ஹெக்டேவின் துரதிர்ஷ்டம் துரத்திக் கொண்டே வந்தது. மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட பூஜா ஹெக்டேவுக்கு பட வாய்ப்புகளே இல்லாமல் போய் விட்டது.
இந்நிலையில், இந்தி டிவி சீரியல் நடிகர் ரோஹன் மெஹ்ரா என்பவருடன் காரில் வெட்கப்பட்டுக் கொண்டு யாராவது பார்த்துடப் போறாங்க என பேசுவது போன்ற வீடியோ காட்சி ஒன்று லீக்காகி வைரலாகி வருகிறது. காருக்கு வெளியே இருந்து பக்காவான கேமரா மூலம் ஜூம் அடித்து இந்த வீடியோவை எடுத்துள்ளனர். இவரைத்தான் பூஜா ஹெக்டே காதலித்து வருவதாக பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. முன்னதாக சல்மான் கானுடன் காதல் என அந்த படம் வெளியான போது ஏகப்பட்ட வதந்திகள் கிளம்பின.
Heartbreak 💔 #PoojaHegde #Broken_Heart #broke pic.twitter.com/wqZ6b6EWPx
— PoojaJinxed (@3scobar_3ditz) March 31, 2024