Categories: latest newstelevision

ஒருவழியா முத்துவை வில்லனாக்கியாச்சு… டைரக்டர் மீது காண்டான ரசிகர்கள்…

Siragadikka Aasai: இன்றைய எபிசோடில் வாசுதேவன் தொடர்ந்து மீனா மீது திருட்டுப்பழியை சுமத்திக்கொண்டே இருக்கிறார். இருந்தும் முத்து அமைதியாகவே பேசிக் கொள்ளலாம் கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என தொடர்ந்து  சொல்லிக் கொண்டே இருக்கிறார்.

இதை அடுத்து, எனக்கு தெரியும் அவங்க குடும்பம் எல்லாமே அப்படித்தான். மீனா தம்பி உங்க பைக்கை திருடி தானே  உங்க கல்யாணம் நடந்துச்சு. நீயும் பூக்கடை தானே வச்சிருக்க அப்புறம் எதுக்கு உனக்கு இந்த திருட்டு புத்தி. பேசாம எதுக்கு நீ பிச்சை எடுக்கலாம் என மோசமாக பேசுகின்றனர்.

இதையும் படிங்க: டேனியல் பாலாஜியின் மரணம்.. கோயிலில் நடந்த அதிசயம்! கதிகலங்கி நிற்கும் ஆவடி மக்கள்

இதனால் பொறுமை இழக்கும் முத்து வாசுதேவனை பளார் என அறைந்து விடுகிறார். அண்ணாமலை  முத்துவை கொஞ்சம் பொறுமையா இருடா என பிடித்து நிறுத்துகிறார். அந்த நேரத்தில் உள்ளே வரும் ஸ்ருதி நடந்ததை தெரிந் தெரிந்து கொள்ளாமல் முத்துவின் மீது கோபப்படுகிறார்.விஜயாவும் சேர்ந்து கொண்டு பேச இதான் சாக்குனு அவங்கள பேச வேணாம்னு சொல்லுங்கப்பா என்கிறார் முத்து.

விஷயத்தை தெரிந்து கொள்ளாத ஸ்ருதி, என்னவேணாலும் நடந்திருக்கட்டும். எங்க அச்சன எப்படி அவரு அடிக்கலாம் எனத் திட்டுகிறார். இதில் கடுப்பாகும் முத்து நாங்க இங்க வந்தது தப்புதான் என சொல்லிவிட்டு மீனாவை கூப்பிட்டுக்கொண்ட கிளம்பி விடுகிறார்.

வாசுதேவனின் மனைவி இதுக்கு தான் அந்த குடிகாரன் நீங்க கூப்பிடக்கூடாதுன்னு சொன்னேன் என பிரச்சனையை தொடர்ந்து பெரிதாக்கி கொண்டே இருக்கிறார். உங்க வீட்டுக்காரர் தான் ஒண்ணுமே இல்லாத விஷயத்தை தொடர்ந்து பேசிக்கிட்டே இருந்தாரு என அண்ணாமலை சொல்கிறார்.

இதையும் படிங்க: பிரபல மலையாள நடிகரை கோட்டில் களமிறக்க நினைத்த வெங்கட் பிரபு… ஆனா?

அண்ணாமலை ஸ்ருதி அழைச்சிட்டு வீட்டுக்கு வா எனக்கு கூப்பிட, நான் வரல என சொல்லும் ஸ்ருதி ரூமுக்குள் சென்று அடைந்து விடுகிறார். இங்க நடந்த பிரச்சினையை பெரிதாகுனது ஸ்ருதி அப்பா தான் நீ பேசி புரிய வைத்து வீட்டுக்கு அழைச்சிட்டு வா என ரவியிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார் அண்ணாமலை.

நடந்த பிரச்சனையில் ரோகிணி தன்னை இனிமேல் மாமியார் கண்டுகொள்ள மாட்டார் என நிம்மதி பெருமூச்சு விடுகிறார். வித்யா இப்போ காப்பாற்றினது முத்து தான் என சொல்லி சிரித்துக் கொண்டு அங்கு இருந்து செல்கின்றனர். இதை எடுத்து வீட்டுக்கு வரும் விஜயா கடும் கோபத்தில் இருக்கிறார்.

அப்போ ஒரு அண்ணாமலையிடம் முத்துவை குறித்து திட்டி பேசிக்கொண்டே இருக்கிறார். அவன் மனைவியை பற்றி தப்பா சொன்னால் அவன் எப்படி அமைதியாக இருப்பான் மீனா அப்படிப்பட்ட பொண்ணா எனக் கேட்கிறார்.  அவர் செஞ்சாலும் செஞ்சிருப்பா என்கிறார் விஜயா. இத்துடன் இன்றைய எபிசோடு முடிந்தது.

Akhilan

Recent Posts

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

2 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

15 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

15 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

16 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

17 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

23 hours ago