ரோகிணியின் பிராடுத்தனம்… மனோஜை வச்சு காய் நகர்த்தும் பலே கேடி தான்!... போங்கப்பா…

by Akhilan |
ரோகிணியின் பிராடுத்தனம்… மனோஜை வச்சு காய் நகர்த்தும் பலே கேடி தான்!... போங்கப்பா…
X

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் போலீஸ் ஜீவாவின் வக்கீலிடம் அவருக்கு சொல்லி புரிய வையுங்கள் என அனுப்புகிறார். என்ன சார் சீக்கிரம் என்னை அனுப்பி வையுங்க என்கிறார். ஒன்னும் பண்ண முடியாது. நீங்க வசமா மாட்டிக்கிட்டீங்க.

சும்மா இல்லாம பிராப்பரிட்டி வாங்க வந்தேன் என எல்லாத்தையும் சொல்லி வச்சிருக்கீங்க. இப்போ நீங்க சமாதானமா போறதை தவிர வேற வழியே இல்லை. ஜீவா நான் எதுக்கு சார் பணம் கொடுக்கணும். நான் எந்த தப்பும் செய்யலை என்கிறார். வக்கீல், அவங்க கிட்ட சொல்றதையே என்கிட்ட சொல்லாதீங்க. நீங்க பண்ண எல்லாமே எனக்கும் தெரியும்.

இதையும் படிங்க: பிரபாஸோட 500 கோடி பட்ஜெட் படத்துக்கு இப்படியொரு ஆப்பா?.. அந்த படத்தோட அட்டுக் காப்பின்னு சொல்றாங்க!

பணம் கொடுக்கலை சொன்னா உங்க பாஸ்போர்ட் லாக் ஆகிடும். நீங்க கனடா போக முடியாது. கோர்ட் கேஸ்னு இழுத்துட்டு தான் இருப்பீங்க என்கிறார். உங்க மேல தப்பு உறுதியானா ஜெயிலுக்கு தான் போகணும் என்று சொல்ல வேறு வழியில்லாமல் ஜீவா பணத்தை கொடுத்து விட சம்மதம் சொல்கிறார். இங்கு மீனா வண்டி கிடைக்குமா, கிடைக்காதா என்று முத்துவிடம் கேட்டுக் கொண்டே இருக்கிறார்.

முத்து அவரை அமைதிப்படுத்தி கொண்டுள்ளார். அடுத்து வக்கீல் வந்து பணத்தினை தர சம்மதம் சொல்லிவிடுகிறார். ரோகிணி 27 லட்சம் கொடுத்தா பத்தாது. அதுக்கு வட்டியுடன் சேர்த்து 30 லட்சமாக கொடுக்க வேண்டும் என்று சொல்ல ஜீவா ஷாக் ஆகிவிடுகிறார். ஆனால் வக்கீல் அதுக்கும் சம்மதம் சொல்லிவிடுகிறார். இனி எங்களுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று டாக்குமெண்ட்டில் வக்கீல் மனோஜை கையெழுத்து போட சொல்கிறார்.

இதையும் படிங்க: 100 கோடி வசூல் செய்த மார்க் ஆண்டனி!.. 10 கோடியாவது ரத்னம் வசூல் செய்யுமா?.. 3 நாள் வசூல் எவ்வளவு?..

ஆனால் ரோகிணி நிறுத்தி பணத்தினை கேட்க ஜீவாவும் டிரான்ஸ்பர் செய்துவிடுகிறார். அதன்பின் மனோஜ் கையெழுத்து போடுகிறார். மனோஜுக்கு ரோகிணி சாட்சி கையெழுத்து போடுகிறார். ஜீவாவுக்கு சாட்சி கையெழுத்து போட வெளியில் சென்று பார்க்க முத்துவை போட சொல்கின்றனர். மனோஜ் மற்றும் ரோகிணி வெளியில் வந்து விட முத்து மற்றும் மீனா இன்னொரு ரூமுக்கு சென்று டிராபிக் போலீஸை பார்க்கின்றனர்.

ஹோட்டல் சென்று சாப்பிடும் மனோஜ் முத இந்த காசை அந்த முத்து மூஞ்சில தூக்கி போடணும் என்கிறார். ஆனால் ரோகிணி லூசா நீ? இந்த காசை வச்சு கனடா போற வழியை பாரு எனக் கூறுகிறார். ஆனால் அந்த கனடா வேலைக்கு வேறு ஒருவர் சென்றுவிட்டதாகவும் இந்த வருடத்துடன் மனோஜின் வயது பார் ஆகிடும் எனவும் ஷாக் கொடுக்கின்றனர்.

இதையும் படிங்க: ரஜினி, கமல், விஜய், பிரபாஸ், அல்லு அர்ஜுன்.. யாரு பாக்ஸ் ஆபிஸ் பாட்ஷான்னு இந்த ஆண்டு தெரிஞ்சிடும்!..

Next Story