பக்கா கேடியான ரோகிணி… அடே எங்களுக்கே காண்டாகுது.. வில்லிக்கு இவ்வளோ சீனா?
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் துணிப்பைகளுடன் வீட்டுக்குள் நுழைகிறார் மனோஜ். அவரைப் பார்த்து என்னடா இவ்ளோ டிரஸ் வாங்கிட்டு வந்திருக்க, தீபாவளி பொங்கல் இன்னும் வரலையே என்கிறார் விஜயா. எனக்கு தீபாவளி வந்துடுமா என மனோஜ் பிடி கொடுக்கிறார்.
பின்னர் ரோகிணி என்னுடைய அப்பா எனக்கு 15 லட்ச ரூபாய் அனுப்பி இருப்பதாக கூறுகிறார். ஜெயில இருந்து எப்படி பணம் அனுப்ப முடியும் என முத்து கேட்க அவர் முன்னாடியே ஒருத்தரிடம் கொடுத்து வைத்திருந்ததாக சமாளிக்கிறார். உங்க அப்பாக்கு முன்னாடியே ஜெயிலுக்கு போற விஷயம் தெரியுமா என கேட்க இல்ல சென்னை வரதுக்காக மாமாவிடம் கொடுத்து வைத்திருந்ததாக சொல்கிறார்.
இதையும் படிங்க:கியாரா அத்வானி எல்லாம் கால் தூசுக்கு வருமா!.. இந்த வயசுலயே இப்படி ஜொள்ளு விட வைக்கிறாரே ஸ்ரீதேவி!..
அப்போ உங்க மாமா வரும்போது எடுத்திட்டு வந்திருக்கலாம் என கேட்கிறார் முத்து. ஸ்ருதி சரியான கேள்வி தான் என்கிறார். பிளைட்டில் அவ்வளவு பெரிய தொகையை எடுத்துட்டு வர முடியாது என சமாளித்து விடுகிறார் ரோகிணி. சரி அப்ப வந்த காசு அப்பாவுக்கு நீ கொடுக்க வேண்டிய காசுல இருந்து கொடுத்திரு என்கிறார் முத்து.
ஆனால் அண்ணாமலை இது ரோகினிக்காக அவங்க அப்பா அனுப்பிய காசு. அதை நாம கேட்பது சரியா இருக்காது என மறுத்து விடுகிறார். இதனால் ரோகிணிக்கு நிம்மதியாகி விடுகிறது. பின்னர் விஜயா, மீனாவிடம் ஜூஸ் போட்டு எடுத்து வர சொல்ல 48 நாள் இன்னும் முடியல என முத்து அவரை வேலை செய்ய விடாமல் தடுத்து விடுகிறார். உள்ளே செல்லும் விஜயா ஜூஸ் போட்டு எடுத்து சென்று மனோஜ்க்கு கொடுக்கிறார்.
என்ன பிசினஸ் செய்யப் போற என கேட்க இன்னும் யோசிக்கலை என்கிறார் மனோஜ். ரூமுக்கு வரும் முத்து மனோஜ் விஷயத்தில் ஏதோ தப்பா இருக்கு என்கிறார். உங்களுக்கு எல்லாத்துலயும் சந்தேகம் இல்ல கோபம் வரும் என மீனா திட்டுகிறார். எனக்கு இன்னொன்றும் வரும் என முத்து மீனாவை நெருங்க எந்த நேரத்தில் இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க என அவரை தள்ளிவிட்டு வெளியில் சென்று விடுகிறார். இதை எடுத்து மனோஜ் விஷயத்தில் இருக்கும் உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என முடிவு செய்து கிளம்புகிறார் முத்து.
இதையும் படிங்க:ஷங்கரின் முதல் படம் ‘ஜெண்டில்மேன்’ இல்ல! இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு சீக்ரெட்
வீட்டில் எல்லாரும் சாப்பிட உட்கார அவர்களுக்கு முட்டை பரிமாறுகிறார் விஜயா. இன்னும் வேற தான் முடியல அதுக்குள்ள முட்டை சாப்பிட்டால் இருக்க காசு திரும்பி போய்விடும் என முத்து பயமுறுத்துகிறார். இதனால் விஜயா வைத்த முட்டையை எடுத்துவிட்டு சட்னி ஊற்றி விடுகிறார். மனோஜ் என் பெயரில் 15 லட்ச ரூபாய் வந்திருக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு என உளறி கொட்ட எல்லோரும் அதிர்ச்சியாக பார்ப்பதுடன் இன்றைய எபிசோடு முடிந்தது.