அப்பாவுக்காக கொஞ்சமா செஞ்சாலும் தப்பு தான் முத்து… கூட்டத்தில் மொத்தமாக ரவிக்கு, மனோஜுக்கும் ஆப்பா..!
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் முத்துவை குடிக்க அழைத்து செல்கிறார் செல்வம். போகும் வழியிலெல்லாம் அவர் புலம்பி கொண்டே சென்று பாரில் உட்கார்கிறார். அங்கு ஒருவர் மனைவியிடம் சாரி சொல்லிக்கொண்டு இருக்கு மன்னிப்புனால தான் நான் இங்க வந்திருக்கேன். போட அங்குட்டு என மிரட்டி விடுகிறார். பின்னர் செல்வம் குடிக்க சொல்ல அப்பா கிட்ட திட்டு விழும் என கொஞ்சமா குடிச்சி விட்டு கிளம்புகிறார்.
வீட்டுக்கு வரும் முத்துவை சாப்பிட சொல்கிறார் அண்ணாமலை. அவரும் போய் மீனாவிடம் சப்பாத்தி வேண்டாம். ஆம்லேட் வேணும் என்கிறார். சரியாக முத்துவை பிடித்த மீனா குடிச்சீங்களா எனக் கேட்க நானா சொல்ற வரை தெரியாது என மழுப்பி விடுகிறார். சரி சாப்பிடுங்க எனக் கூற நீயே சாப்பிடு என பாக்ஸை திறந்து பார்க்க நிறைய சாப்பாடு இருக்கிறது. ரவி, ஸ்ருதி வரதாக கூறுகிறார்.
இதையும் படிங்க: பிரபாஸுக்கு வேட்டு வைத்த பாலிவுட் பாட்ஷா!.. இனிமே இந்த பக்கம் வந்துடாதீங்கன்னு எச்சரிக்கிறாரா?
அந்த நேரத்தில் ஸ்ருதியுடன் ரவி உள்ளே வருகிறார். மீனா ப்ரஷ்ஷாகி விட்டு சாப்பிட வாங்க என்கிறார். ஆனால் அவர்களோ நாங்க வெளியில் சாப்பிட்டு விட்டதாக சொல்லிவிடுகிறார். இதனால் முத்து கோபமாகி இவ உட்கார்ந்து சமைச்சு வச்சிருக்கா நீங்க அசால்ட்டா சொல்றீங்க. போன் பண்ணி சொல்லி இருக்கணும்ல எனக் கேட்க ரவி மன்னிச்சிடுங்க என சப்பென்று முடித்துவிடுகிறார்.
இதனால் கடுப்பான முத்து ரவியை உட்கார வைத்து சாப்பிட சொல்கிறார். ஒரு கட்டத்தில் குடும்பமே அங்கு கூடி விடுகின்றனர். அண்ணாமலையும் முத்துவுக்கு சப்போர்ட் செய்து பேசுகிறார். ஆனால் ஸ்ருதி கேட்குறத குடிச்சிட்டா கேட்பாங்க என உடைத்து விடுகிறார். இதனால் அண்ணாமலை எதுவும் பேசாமல் சென்று விடுகிறார். குடிச்சிட்டு தான வந்த என மனோஜ் நக்கலாக கேட்கிறார். ஏன் நீங்களாம் குடிக்கலையா?
இதையும் படிங்க: ஒருவழியா கேண்ட்டீன் தொல்லை இனி இல்லை..! அடுத்து கணேஷ் பிரச்னையா? பாவம் தான் பாக்கியா!
ரவி பிறந்தநாளுக்கு நம்ம மூணு பேரும் மேல உட்கார்ந்து குடிச்சோமே என எல்லாரிடமும் உண்மையை சொல்லி விடுகிறார். இதில் ரோகினி ஷாக்காகி ரூமுக்குள் அழைத்து சென்று விடுகிறார். ஸ்ருதியும் ரவியை அழைத்து சென்று விட விஜயா நீங்களே கொட்டிக்கோங்க என திட்டி விட்டு செல்கிறார். மீனா வெளியில் சென்று வருத்தமாக நிற்க முத்து வந்து கேட்கிறார். வா சாப்பிடலாம் எனக் கூப்பிட வேணாம் என்கிறார்.
குடிக்காரன் பொண்டாட்டிக்கு என்ன மரியாதை எனச் சொல்ல நான் இவ்வளோ தான் குடிச்சேன் என்கிறார். உடனே அவரோ அன்னைக்கு சாம்பாருல எல்லா காய் மாதிரி தானே பல்லியும் கிடந்துச்சு தூக்கி போட்டு சாப்பிட வேண்டிதானே என்கிறார். அது விஷம் என முத்து கூற இதுவும் அப்படி தான் என்கிறார்.
தொடர்ந்து நீங்க கொஞ்சமா குடிச்சிட்டு ஆக்ஸிடண்ட் செஞ்சா கேட்க மாட்டாங்களா எனக் கேட்க முத்து பதில் சொல்ல முடியாமல் அமைதியாக நிற்பதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.