ரோகினிகிட்ட எதோ தப்பு இருக்கு.. யோசித்த முத்து..! விஜயாவின் ப்ளானுக்கு ஆப்படித்த அண்ணாமலை!

by Akhilan |
ரோகினிகிட்ட எதோ தப்பு இருக்கு.. யோசித்த முத்து..! விஜயாவின் ப்ளானுக்கு ஆப்படித்த அண்ணாமலை!
X

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மனோஜ் பணம் கேட்டு விஜயாவிடம் நச்சரிக்கிறார். அவர் என்னிடம் எதுவுமே இல்லை எனக் கூற ரோகினி கொடுத்தால அதுல கொடுங்க என்கிறார். இத நீ எப்போடா பாத்த? எனக் கடுப்படுத்துவிட்டு கொஞ்சமாக கொடுக்கிறார்.

அவ்வளவோ தானா என மனோஜ் கூற வேண்டும்னா உன் பொண்டாட்டிக்கிட்ட போய் கேளு என்கிறார். இதை தொடர்ந்து எல்லாரும் படுத்துவிட முத்து வீட்டுக்கு வருகிறார். அவர் ரூமுக்குள் வந்ததும் மீனா கதவை சாத்துகிறார். உடனே விஜயா பாருங்க எப்படி சாத்துறா எனக் கேட்க அவங்க ரூம் தானே என்கிறார் அண்ணாமலை.

இதையும் படிங்க: வார்னிங் கொடுத்த சிவாஜி… கோபப்பட்ட இயக்குனர்.. கடைசில தோல்வியை சந்திச்சதுதான் மிச்சம்…

ஆனால் மீனா அவங்களுக்கு தொல்லையா இருக்கும். நம்ம அத்தைக்கு எதுவும் காசு கொடுப்போமா எனக் கேட்கிறார் மீனா. அதான் வீட்டு செலவுக்கு காசு தரேன். அம்மா எதுவும் கேட்டாங்களா என்கிறார் முத்து. இல்ல இல்ல ரோகினி கொடுத்தாங்க. அத்தைக்கு பாக்கெட் மணி. கட்டா கொடுத்தாங்க. 5000 ரூபாயினு பேசிக்கிட்டாங்க என்கிறார்.

இதையடுத்து, முத்து அந்த பொண்ணு மேல எனக்கு சந்தேகம் தான். இப்போ எதுக்கு இந்த காசு. ஸ்ருதி ஓடி வந்து கல்யாணம் செஞ்சிக்கிட்டாலும் அந்த பொண்ணு வீட்டுல வராங்க. இது மலேசியா, சிங்கப்பூர்னு சொல்லுது ஆனா யாரும் வரது இல்லையே? அட்லீஸ்ட் ஒரு வீடியோ காலில் கூட பேசலை என்கிறார்.

விஜயாவுக்கு அவசரமாக பாத்ரூம் வந்துவிடுகிறது. அவர் ரவி ரூமை தட்ட கதவு திறக்கவில்லை. அடுத்து மனோஜ் ரூமை தட்ட அவரும் திறக்கவில்லை. முத்து ரூமை தட்டலாம் எனப் போக அண்ணாமலை தடுத்து கீழே இருக்கும் பாத்ரூமுக்கு கூட்டி சென்று வருகிறார். இதையடுத்து அண்ணாமலையிடம் தனிக்குடித்தனம் வைப்பது பத்தி என்ன யோசிச்சிருக்கீங்க எனக் கேட்கிறார்.

இதையும் படிங்க: தாலி கட்டும் நேரத்தில் விரைந்த போலீஸார்! அந்த நடிகர் கொடுத்த புகார் - அதிரிபுதிரியாக நடந்த போண்டாமணி திருமணம்

அவங்களாம் ரூம்ல தானே இருக்காங்க. நம்ம தனி குடித்தனம் போயிடலாம். இல்ல அம்மா வீட்டுக்கு போலாம் என்கிறார். இதனால் விஜயா அதிர்ச்சி ஆகிவிடுகிறார். அடுத்த நாள் பார்வதியை பார்க்க வந்து ரோகினி கொடுத்ததை நினைத்து சொல்லி சந்தோஷப்படுகிறார். முதல் மற்றும் மூன்றாவது மருமக பிரச்னையே இல்ல. இந்த மீனாவால தான் தொல்லை. தனி குடித்தனம் வக்கலாம் பாத்தா இவர் தடுத்துட்டாரு. அதுக்கும் ஒரு ஐடியா இருக்கு. அதுங்களையே போக வைக்கிறேன் என்கிறார்.

அடுத்த நாள் மீனாவை போட்டு வேலை வாங்கி கொண்டு இருக்கிறார் விஜயா. அங்கு வரும் ரோகினி தோசை வேண்டும் எனக் கேட்டுக்கொண்டு இருக்கிறார். ஸ்ருதி இன்னும் மாமியார் தொல்லையா நானா இருந்தா கத்தியை எடுத்து குத்தி இருப்பேன் என டப்பிங் மேனேஜரிடம் பேசிக்கொண்டு இருக்கிறார். இந்த நேரத்தில் மீனாவை கூப்பிட அவர் என்ன அத்தை எனக் கோபமாக கேட்டுக்கொண்டே கத்தியுடன் வருகிறார். இதனை பார்த்து விஜயா அதிர்ச்சி அடைவதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

Next Story