Connect with us

latest news

சிறகடிக்க ஆசை: ஸ்ருதிக்காக மீனா வாழ்க்கையில் ஆப்பு வைத்த ரவி… ருத்ரதாண்டவம் ஆடப்போகும் முத்து?!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மீனாவிடம் முத்து பேசிக்கொண்டு இருக்கிறார். காரில் படுத்திருக்கேன். நீ பேசிக்கிட்டே இரு தூங்கிடுவேன் என முத்து கூற மீனா பேசி பேசியே முத்துவை தூங்க வைத்து விடுகிறார். அதே நேரத்தில் நாளை கல்யாணத்துக்கு வெளியில் செல்ல ஐடியா செய்கிறார் ஸ்ருதி.

ரவியோட அப்பா அவனை என்னிடம் பேச வேண்டாம் என சொல்லி விட்டாராம். அவன் என்னை வேண்டாம் எனக் கூறி விட்டதாக சொல்லி கண்ணீர் வடித்து அழுகிறார். இதை பார்த்த ஸ்ருதி அப்பா, அம்மா மிடிள் க்ளாஸ் பையன் அப்டி தான் இருப்பான். நாங்க சொன்னோம். நீ தான் கேட்கலை எனக் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: நள்ளிரவில் லியோ நடத்திய சாதனை!.. அடேங்கப்பா ஒரே ரத்த களறியா இருக்கே.. பாக்ஸ் ஆபிஸ் பிச்சிக்கப்போகுது!..

நாங்க பார்த்த மாப்பிள்ளை தான் உனக்கு சரியா வருவான் எனக் கூறுகின்றனர். நானும் ஷாப்பிங் போனப்பையே புரிஞ்சிக்கிட்டேன்பா. அப்போ நாளை என் ப்ரண்ட் கல்யாணத்துக்கு பிஜூவுடன் போயிட்டு வரேன். அவரும் வரேனு சொன்னதா சொல்கிறார். ஸ்ருதி அம்மாவோ நீயா பேசுற என்னால் நம்பவே முடியலை என ஆச்சரியப்படுகிறார்.

அந்த நேரத்தில் வீட்டுக்கு வரும் பிஜூ மோதிரத்தினை பரிசாக கொடுக்கிறார். நானே கூப்பிட்டு போறேன். நீங்கலாம் வரவேண்டாம் எனச் சொல்லி விட்டு கிளம்புகின்றனர். அந்த நேரத்தில் சீதா தன்னுடைய அம்மா கோயிலுக்கு வரக்கூடாது என்பதற்காக அவரை மேல்மருவத்தூர் கோயிலுக்கு செல்ல பணம் கட்டி விட்டதாக கூறுகிறார்.

அடுத்து ரவி மீனாவிடம் ஸ்ருதி கல்யாணம் பண்ணிக்கணும் என பிடிவாதமா இருக்கா அண்ணி. அப்பாவின் நம்பிக்கையையும் கெடுக்க முடியாது. என்ன செய்றதுனே தெரியலை அண்ணி எனக் கூறுகிறார். இதை கேட்ட மீனா தான் பேசுவதாக சொல்கிறார்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் செஞ்ச துரோகம் – குழந்தைகளுக்காக விடுறேன்! நேசமணியா இருந்த இமானுக்குள்ள இவ்ளோ வேதனையா?

நாளை கோயிலுக்கு வர சொல்றேன் எனக் கூறிவிடுகிறார். காலையில் கல்யாணத்துக்காக ரவி கிளம்ப திடீரென இடித்து கொள்கிறார். அண்ணாமலை அவரை உட்கார வைத்து தேய்த்து விடுகிறார். மீனாவும் கிளம்ப கோயிலுக்கு போவதாக விஜயாவிடம் கூறுகிறார்.

உங்க அம்மாவை தானே பார்க்க போற என மீனாவிடம் கேட்கிறார் விஜயா. அவர் அதிர்ச்சியாகி சமாளித்து விட்டு கோயிலுக்கு செல்கிறார். இதையடுத்து நாளை என போடப்பட்ட வீடியோவில் ஸ்ருதிக்கும் ரவிக்கும் திருமணம் முடிந்து விடுகிறது. இதை பார்த்த மீனா அதிர்ச்சியாகி ரவியை கூப்பிடுவதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

google news
Continue Reading

More in latest news

To Top