சண்டை போட்டு கொள்ளும் முத்து, ஸ்ருதி… ரூமுக்குள் செட்டிலான விஜயா... மீண்டும் பழைய கதையா?…

by Akhilan |
சண்டை போட்டு கொள்ளும் முத்து, ஸ்ருதி… ரூமுக்குள் செட்டிலான விஜயா... மீண்டும் பழைய கதையா?…
X

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் மீனா, அண்ணாமலையை அழைத்து கொண்டு ஹாஸ்பிட்டல் செல்கிறார். அப்போ முத்து கால் செய்ய மீனா விஷயத்தினை கூறியதும் பதறியடித்து மருத்துவமனைக்கு செல்வத்துடன் வருகிறார். அண்ணாமலையை சோதித்த மருத்துவர், ஸ்டண்ட் வச்சிருக்கதால கொசு மருந்து அலர்ஜி ஆகிருக்கு.

லேட்டா வந்து இருந்தா எந்த பிரச்னையும் இல்லை எனக் கூறிவிடுகிறார். அப்போ ஹாஸ்பிட்டல் பில்லாக 15 ஆயிரம் கேட்க மீனா தன் தாலியை வைக்க சொல்லி கொடுக்கிறார். முத்து மறுத்துவிடுகிறார். பின்னர் செல்வம் டியூ கட்ட வைத்து இருந்த காசில் இருந்து வாங்கி கொடுக்கிறார்.

இதையும் படிங்க: லால் சலாம் சோலி முடிஞ்சு!.. சன்டே கலெக்‌ஷனும் செல்ஃப் எடுக்கல!.. வேட்டையன் படத்துக்கும் வேட்டு?..

பின்னர் விஜயா வந்து மீனாவால் தான் நடந்ததாக சத்தம் போடுகிறார். அண்ணாமலை பேச முயல பின்னர் முத்து என்ன நடந்தது எனக் கேட்கிறார். இதனால் முத்து கோபமாக அப்போ ரவி, மனோஜ் அங்கு வருகின்றனர். உன் பொண்டாட்டியால தான் எல்லாம். வெளியில் போங்க எனத் திட்டுகிறார் முத்து.

இதனை தொடர்ந்து, விஷயம் தெரிந்து ரவியும் அதிர்ச்சி ஆகிவிடுகிறார். விஜயா உன் பொண்டாட்டிக்கிட்ட கொஞ்சம் புத்தி சொல்லி வை என்கிறார். அண்ணாமலையை வீட்டுக்கு அழைத்து வந்துவிட ஸ்ருதி வந்து சின்ன பிரச்னை தானே. அதான் அனுப்பிட்டாங்க என பேச ஏன் ஹாஸ்பிட்டலயே இருக்கணும் நினைச்சியா என்கிறார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட ஒரு கட்டத்தில் நல்லது நினைச்சது என் தப்பு தான் எனத் திட்டிவிட்டு செல்கிறார்.

இதையும் படிங்க: அய்யய்யோ ஆண்ட்ரியா இனிமே நடிக்க மாட்டாரா?.. பிசாசு 2 என்ன ஆச்சுன்னு கேட்டதுக்கு இப்படி சொல்லிட்டாரே!

ரூமில் இருக்கும் ஸ்ருதி, ரவிக்கு இடையில் முட்டிக்கொள்கின்றனர். ஒரு கட்டத்தில் இருவரும் அடிக்க பாட்டிலை எடுத்துக்கொள்ள சரி வேண்டாம் என பின்னர் சமாதானம் ஆகின்றனர். அடுத்து வெளியான புரோமோவில் விஜயாவிடம் இருந்து ஒரு லட்சத்தினை அடித்தது மீனா தம்பி சத்யா தான் என்பது தெரியவருகிறது. இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

Next Story