இந்த சீனுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல!... ஹீரோவை விட்டுட்டு வில்லன்களை தூக்கி பிடிக்கும் சிறகடிக்க ஆசை
Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் மனோஜை அயர்ன் கடை வைக்க சொல்லி கலாய்த்து விடுகிறார் முத்து. அப்போ அவருக்கும் டிரிப் வர நான் கிளம்புகிறேன் என போய் விடுகிறார். ரூமுக்குள் வரும் மனோஜிடம் உன் தம்பி இப்டியா பேசுவாரு எனக் கடுப்படிக்கிறார். இன்னைக்கு என்ன ஆனாலும் நீ வேலையோட தான் வரணும் என்கிறார்.
ஒரே நாளுல எப்படி எனத் தயங்குகிறார் மனோஜ். வேலையில்லாமல் வீட்டுக்கு வராத எனச் சொல்லி அனுப்புகிறார். மனோஜ் சென்ற இடத்தில் எல்லாம் வர் தகுதிக்கு வேலை இல்லை எனக் கூறிவிடுகின்றனர்.
இதையும் படிங்க: சிவாஜியும் விஜயகாந்தும் இணைந்து நடித்த ஒரே படம்! 34 ஆண்டுகள் ஆகியும் மனதில் நிற்க காரணமே இதுதான்!
ஒரு ஹோட்டலில் வேலைக்கு ஆட்கள் தேவை இருப்பதை பார்த்து வேலை கேட்கிறார் மனோஜ். சப்ளையர் வேலை என்றால் அலைய விடுவார்கள். அதனால் ஆர்டர் எடுக்கும் வேலை ஒகே என்கிறார். 12 மணிநேர வேலை. 4 நாட்கள் வேலை பார்ப்பதை வைத்து சம்பளம் பேசலாம் எனவும் கூறிவிடுகிறார். அன்றே மனோஜ் வேலையில் சேர்ந்து விடுகிறார்.
வீட்டுக்கு வரும் மனோஜ் தனக்கு வேலை கிடைத்து விட்ட விஷயத்தை கூறி ரோகினிக்கு அல்வா வாங்கிட்டு வந்ததாக கூறுகிறார்.
அங்கிருந்த முத்து, நாள் வேலைக்கு போனா தானே சம்பளம் அன்னைக்கே கொடுப்பாங்க என முத்து கிடுக்கு பிடி போட எங்க ஆபிஸ் கொஞ்சம் டிப்பிரண்ட் எனச் சமாளிக்கிறார்.
விஜயா வாயெல்லாம் பல்லாக மனோஜை புகழ்ந்து தள்ளுகிறார். ரூமுக்கு வரும் ரோகினி, மனோஜிடன் என்ன வேலை எனக் கேட்க நல்ல வேலை தான். நான் பார்க்கில் உட்காரவில்லை. என்ன வேலை எனக் கேட்காதே எனக் கூறிவிடுகிறார்.
மீனா பூக்கடையில் வியாபாரம் செய்து கொண்டிருக்க அங்கு வரும் பெண் பூ வாங்கிக்கொண்டு என்ன மீனா கழுத்தில் இருந்த நகையை காணும். மாமியார் எதும் வாங்கிக்கிட்டாங்களா எனக் கேட்கிறார். அப்போ அங்கு வரும் அண்ணாமலை அதை கேட்டுக்கொண்டு இருக்கிறார். மீனா இல்ல செயினில் ஒரு கன்னி விட்டு இருந்துச்சி கடையில் கொடுத்து இருக்கேன் எனச் சமாளிக்கிறார். என் மாமியார் ரொம்ப பாசமானவங்க என டயலாக் விடுகிறார்.
சரியென அந்த பெண் கிளம்ப அங்கு வரும் விஜயா எல்லாரும் ஆபிஸ் போனும் வந்து டிபன் செய் எனத் திட்டுகிறார். அண்ணாமலை வர காபி போட்டு தரவா என மீனா கேட்க நீ கடையை பாரு எனக் கூறி உள்ளே செல்கிறார்.
இதையும் படிங்க: முதல் சிங்கிள் ஷாட் ஹீரோவாக சிவாஜி மாறியது இப்படித்தான்!.. நடிகர் திலகம்னா சும்மாவா!
பூ வாங்கி சென்ற பெண் வந்து என்ன உன் மாமியாரை அப்படி சொன்ன இப்போ இப்படி பேசிட்டு போறாங்க எனக் கேட்க மாமாக்கு சாப்பாடு கொடுக்கணும். அந்த டென்ஷனில் பேசுவதாக சமாளித்து விடுகிறார். இதையும் அண்ணாமலை கேட்டு விடுவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.