சத்யாவால் மாட்டிக்க இருக்கும் மீனா… கடுப்பில் கத்தும் முத்து… பிரச்னை ஒரு பக்கமாவே போகுதே?

by Akhilan |
சத்யாவால் மாட்டிக்க இருக்கும் மீனா… கடுப்பில் கத்தும் முத்து… பிரச்னை ஒரு பக்கமாவே போகுதே?
X

Siragadikka Aasai: இன்றைய எபிசோடில் சத்யா ஹாஸ்பிடலில் இருக்க மீனா, முத்துவிடம் கால் செய்துவிட்டு கவலையாக உள்ளே வருகிறார். சீதா மாமா எப்போ வருவாரு எனக் கேட்க அவர் சவாரிக்கு போயிருக்காராம் என்கிறார். சரிவிடு என்கிறார் மீனாவின் அம்மாஅ.

மீனா மற்றும் சீதாவை விட்டுவிட்டு டிரெஸ் எடுக்க வீட்டுக்கு செல்கிறார் மீனாவின் அம்மா. சத்யா மாமா வேற எதுவும் சொன்னாரா எனக் கேட்க இல்லையே என்கிறார் மீனா. அதை தொடர்ந்து வீட்டுக்கு வருகிறார் மீனா. அண்ணாமலை எப்படி இருக்கான் உன் தம்பி எனக் கேட்க பைக்கில் இருந்து விழுந்து கையில் அடிப்பட்டு இருப்பதாக சொல்கிறார். உடனே மனோஜ் திருட்டு பைக்கா என்கிறார்.

இதையும் படிங்க: பிக்பாஸ் பாக்குற நீங்கதான் முட்டாள்! அப்பா இறந்தப்போ கூட விடல – அனிதா அனுபவித்த வேதனை

விஜயா ஆமா முத்து பைக் எடுத்தான்ல என்கிறார். இதற்கிடையில் ஸ்ருதி அப்போ உன் தம்பி திருடனா என்கிறார். ரவி ஸ்ருதியை அடக்குகிறார். அப்போ முத்து வீட்டுக்கு வருகிறார். மீனா ஏன் ஹாஸ்பிட்டலுக்கு வரலை என்கிறார். வேலை இருந்துச்சு என அசால்ட்டாக சொல்லிவிடுகிறார். அவன் என்ன செஞ்சி விழுந்தானோ எனத் திட்டுகிறார். என் தம்பி ஒழுங்கா தான் இருக்கான். குடும்பத்துக்காக வேலைக்கு போறான் என்கிறார்.

நீங்க வருவீங்கனு அம்மா ரொம்ப எதிர்பார்த்துட்டு இருந்தாங்க. மூணு பொம்பளைங்க என்ன பண்றதுன்னு தெரியாம தவிச்சுக்கிட்டு இருந்தோம் என மீனா சொல்கிறார். உடனே அண்ணாமலை நாளைக்கு முதல் வேலையா சத்யாவை போய் பார்க்கணும் என்கிறார். முத்துவும் சரியென்கிறார். அடுத்த நாள் ஹாஸ்பிட்டலில் சீதா மருந்து வாங்க மீனாவின் அம்மா வெளியில் போன் பேசிக்கொண்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: ஈஸ்வரியிடம் சரண்டரான பாக்கியா… சண்டை இழுத்துவிடும் கோபி… ஒரு ஆப்பை பார்சல் பண்ணுங்கப்பா…

அப்போ வரும் முத்து, சத்யாவிடம் என்ன காலேஜ் போகாம ஊர் சுத்திட்டு இருக்க என்கிறார். அது பிரண்ட்ஸ் ஓட செஞ்சதுதான். என் பிரண்ட் அடிச்சதால் உங்க பிரண்ட் அடிச்சேன். நீங்க என் கையை உடைச்சிட்டீங்க என்கிறார். ஓ அதுக்காக உன்னை அடிச்சேன் நினைக்கிறீயா எனக் கேட்கிறார். பின்னர் விஜயாவிடம் இருந்து பணத்தினை திருடும் வீடியோவை காட்டி இதுக்கு என்ன சொல்லுவ என்கிறார்.

நான் தான் செஞ்சேன். என்னை உங்க வீட்டுல எவ்வளோ அவமானம் படுத்துனாங்க. நீங்க என்னை அடிச்சீங்க. அதுக்கு இது சரியா போச்சு என குற்ற உணர்ச்சியே இல்லாமல் பேசுகிறார். ஒருகட்டத்தில் யோவ் நீயே குடிச்சிட்டு ரவுடி மாதிரி இருக்க. எங்க அக்கா உன்கூட கஷ்டம் தான் படுது நீ எனக்கு அறிவுரை சொல்லுற வேலை வச்சிக்காத என அவமானப்படுத்துகிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது

இதையும் படிங்க: ‘சைரன்’ சத்தம் கேட்குறதுக்குள்ள புடிங்கிடுவாங்கே போல! ஏம்பா சத்தியமா இது அந்தப் படம் இல்ல..

Next Story