Connect with us

Cinema News

அண்ணாமலைக்கு இருக்கும் நம்பிக்கை கூட முத்து மேல மீனாக்கு இல்லாம போச்சே… அச்சோ!

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் சத்யாவுக்கு மீனா அம்மா சூப் வைத்து கொடுக்கிறார். அழுதுக்கொண்டே இருக்க சீதா சமாதானம் செய்கிறார். அக்கா அமைதியா இருக்கா நீயும் ஏன் அழுதுக்கிட்டே இருக்கம்மா என்கிறார். அப்போ அண்ணாமலை அங்கு வருகிறார்.

மாப்பிள்ளையை என் பையன் மாதிரி நினைச்சேன். அவர் எப்படி இப்படி செஞ்சிருக்கலாம். சீதா, தப்பு செஞ்சா திட்டலாம். ஆனா கையை உடைக்கிறது தப்பு தானே மாமா. அண்ணாமலை எனக்கும் எதுவுமே புரியலை. முத்து கோபக்காரன் தான். நியாயமே இல்லாத விஷயத்தில் கோபப்படவே மாட்டான் என சப்போர்ட்டாக பேசுகிறார்.

இதையும் படிங்க: திரிஷா பிரச்சனையில் தலையை விட்ட மன்சூர் அலி கான்!.. அவசர அவசரமா என்ன சொல்லியிருக்காரு பாருங்க!

சத்யா நீ எதுவும் தப்பு செஞ்சியா எனக் கேட்க இல்ல மாமா செல்வம் வட்டி காசை தரலை. அதை கேட்க போய் தான் பிரச்னை வந்ததாக பொய் சொல்கிறார். எனக்கு எதுவுமே புரியலை. நான் செஞ்ச தப்பே உறுதிக்கிட்டு இருக்கு. இப்போ இது வேறை என அண்ணாமலை வருத்தப்படுகிறார். பின்னர் செலவுக்கு கொஞ்சம் காசு கொடுக்க அதை மீனாவின் அம்மா மறுத்துவிடுகிறார்.

மனோஜ் வேலை செய்யும் ஹோட்டலுக்கு அவரின் பார்க் நண்பர் வருகிறார். என்ன போனை எடுக்கலை. பார்க் பக்கம் ஆளை காணும். நீ வேலை இல்லாம இருந்தப்பவே உனக்கு காசு கொடுத்தேன். வேலை செய்றப்ப என்னால் வாங்க முடியாத என்கிறார். பின்னர் நிறைய சாப்பிட்டுவிட்டு பில்லை மனோஜ் தலையில் கட்டிவிட்டு செல்கிறார்.

இதையும் படிங்க: இவங்க எந்த லெவலுக்கும் போவாங்க!.. விடமாட்டேன்!.. டிவிட்டரில் பொங்கிய திரிஷா….

வீட்டுக்கு வரும் அண்ணாமலையிடம் மீனா குடும்பம் மொத்த காசையும் வாங்கிட்டாங்களா எனக் கேட்கிறார் விஜயா. அவங்க உன்ன மாதிரி இல்ல வேண்டாம் எனச் சொல்லிட்டாங்க என்கிறார். அப்போ மீனா வர மாமா வருத்தத்துல அம்மா பேசுனாங்க. தப்பா எடுத்துக்காதீங்க என்கிறார்.

விஜயா இவரை திட்டுனீங்களா எனக் கேட்க அதெல்லாம் இல்லை என்கிறார் அண்ணாமலை. பின்னர் முத்து வந்ததும் அவரை தனியாக அழைத்துக்கொண்டு செல்கிறார். விஜயா என்ன விஷயம் என மீனாவை கேட்க அதை மாமாவிடம் கேளுங்க என பதிலடி கொடுப்பதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

இதையும் படிங்க: திரிஷா விவகாரம்!.. அரசியலுக்கு வந்த பின்னரும் வாய் திறக்காமல் இருக்கும் விஜய்!.. பொங்கும் நெட்டிசன்ஸ்..

google news
Continue Reading

More in Cinema News

To Top