எலி தானா சிக்கப்போகுது!... சொன்ன கதையை உண்மையாக்க நினைத்து சிக்க போகிறாரா ரோகினி?

by Akhilan |
எலி தானா சிக்கப்போகுது!... சொன்ன கதையை உண்மையாக்க நினைத்து சிக்க போகிறாரா ரோகினி?
X

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் உங்க அப்பாவை இல்லனா உங்க மாமாவையாவது வரச்சொல்லுமா. உன் மரியாதைக்கு தான் சொல்றேன். இல்ல என் மாமியார் ரொம்ப ஓவரா பேசுவாங்க என்கிறார் விஜயா. இதனால் ரோகினிக்கு என்ன செய்வது என்றே தெரியாமல் போக வித்யாவிடம் ஐடியா கேட்கிறார்.

அவர் ஒரு கறிக்கடைக்காரரிடம் ரோகினியை அழைத்து சென்று உங்களுக்கு கமல், மணிரத்னம் படத்தில நடிக்க வாய்ப்பு வந்திருக்கு. ஆனா அதுக்கு முன்னாடி இவளோட தாய் மாமாவா நீங்க நடிக்கணும் என்கிறார். என்னால இந்த பொய் சொல்ல முடியாது என அவர் சொல்ல இது உங்களுக்கு ஆடிஷன் என்கிறார் வித்யா.

இதையும் படிங்க: விஜயகாந்த் செய்த தரமான 8 சம்பவங்கள்!.. சினிமா – அரசியல் இரண்டிலும் கலக்கிய கேப்டன்…

அவரும் ஓகே சொல்லிவிட இவர் சும்மா வந்த நல்லா இருக்காதே எனக் கூறி 1 லட்சம் காசை சிட்டியிடம் கடன் வாங்கலாம் எனச் செல்கின்றனர். அங்கு சத்யா சிட்டியுடன் பேசிக்கொண்டு இருக்கிறார். செல்வம் வர என் பிரண்ட் எனக் கூறி சமாளித்து விடுகின்றனர். ஆனால் ரோகினி அதே நேரத்தில் வர சத்யா மறைந்து கொள்கிறார். பின்னர் ரோகினி ஒரு லட்சத்தினை செக் கொடுத்து கடனாக வாங்கி செல்கிறார்.

இவங்க அப்பா பணக்காரர், இவங்களும் பார்லர் வச்சிருக்காங்க. அப்புறம் என்ன கடன்? இனிமே இவங்களுக்கு கடன் கொடுக்காதே எனக் கூறிவிடுகிறார் சத்யா. வீட்டுக்கு மீனா வந்து ஏன் மா நீ வந்த என்கிறார். பின்னர் சத்யா வர என்கிட்ட சொல்லி இருக்கலாமே நம்ம பெருசா செஞ்சிருக்கலாம் என்கிறார். மீனா ஒழுங்கா படி என அட்வைஸ் செய்கிறார்.

இதையும் படிங்க: விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் இப்படி தான் இருப்பார்! ரகசியம் சொன்ன பிரபல நடிகர்…

குடும்பமாக எல்லாரும் ஊருக்கு கிளம்ப மாமாவும் கிளம்பிவிட்டதாக ரோகினி சொல்கிறார். பின்னர் முத்து காரில் அண்ணாமலை, விஜயாவும், இன்னோரு காரில் மற்றவர்களும் கிளம்புவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

Next Story