என்ன தான் அம்மா பாசம் போக மாட்டிங்குதே முத்து!... விஜயா பாத்துக்கோங்க.. இல்ல கஷ்டம்

by Akhilan |
என்ன தான் அம்மா பாசம் போக மாட்டிங்குதே முத்து!... விஜயா பாத்துக்கோங்க.. இல்ல கஷ்டம்
X

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் மனோஜ் பானையை அடிக்க முடியாமல் திணறுகிறார். ரோகினி சியர் செய்ய ஸ்ருதி முத்து டீம் ஜெயிக்கவே கூடாது என அடக்குகிறார். பின்னர் ரோகினியை களம் இறக்கின்றனர். அவரும் அடிக்காமல் கோட்டை தாண்டி நடந்து கொண்டே இருக்கிறார்.

இதனால் அவரும் அவுட்டாக ரவியை இறக்குகின்றனர். அவர் சரியாக பானை அருகில் வந்துவிட்டாலும் அவர் ஓங்கி அடிக்க கம்பு பறந்து விடுகிறது. இதனால் அவரும் அவுட்டாகி விடுகிறார். பின்னர் ஸ்ருதியை இறக்குகின்றனர். பெரிய பில்டப்புடன் ஸ்ருதி அளந்து கொண்டு விளையாட தொடங்குகிறார். கடைசியில் அவருக்கு உயரம் பத்தாமல் போகிறது.

இதையும் படிங்க: பாக்கியாவே விட்டா ஓடிடுவாங்க போல… இதுல இந்த சங்கமம் தொல்லை வேறையா…

மீனா தூக்க பார்க்க முத்து இதெல்லாம் என்ன போங்காட்டம் என்கிறார். பின்னர் ஸ்ருதியாலும் அடிக்க முடியாமல் போகிறது. அதை தொடர்ந்து மீனா வர அவர் சரியாக குறி வைத்து மனோஜ் தலையில் போட்டு விடுகிறார். இதனால் அவர் அம்மா எனக் கத்தி விடுகிறார். ரோகினி வந்து மீனாவை திட்டுகிறார.

ஆனால் ஸ்ருதியோ நீங்களும் அவுட் ஆகிட்டீங்களே என்கிறார். அடுத்து முத்துவை இறக்க அவரும் சரியாக குறி வைத்து பானையை அடித்து உடைத்து வெற்றியை தன் டீமுக்கு கொடுக்க எல்லாரும் அவரை தூக்கி வைத்து கொள்கின்றனர். விஜயா முகம் சரியில்லாமல் போக மூன்று மகன்களும் டீம் லீடர் விஜயாவை தூக்கி வைத்து கொள்கின்றனர். இந்த நேரத்தில் முத்துவை பார்த்து வியக்கிறார் விஜயா.

இதையடுத்து டயர் ஓட்டும் போட்டி நடக்கிறது. ஆறு பேரும் தொடங்க கடைசியில் மீனா மற்றும் முத்து இருவரும் ஒரே நேரத்தில் கோட்டை தாண்டி வெற்றி பெறுகின்றனர். பின்னர் குடும்பமாக கோயில் போகின்றனர். அப்போ பாட்டி முத்து, மீனா ஜெயிக்க கூடாதுனு சிலர் பேசுனாங்க. அதை நான் கேட்டேன். அதுக்கு தான் உங்களை இப்படி ஒரு டீமா பிரிச்சேன். அப்போ யார் ஜெயிக்க கூடாதுனு நீங்க பேசுனீங்களோ.

இதையும் படிங்க: என் கேரக்டர் தெரிஞ்சா பெண்கள் இனி அப்படி சொல்லவே மாட்டாங்க! அரவிந்த்சாமியின் இன்னொரு பக்கம்

Next Story