மனோஜின் புது உருட்டு… ரோகினிக்கு லாக் வைக்க காத்திருக்கும் விஜயா… இது நல்லா இருக்கே!...

by Akhilan |
மனோஜின் புது உருட்டு… ரோகினிக்கு லாக் வைக்க காத்திருக்கும் விஜயா… இது நல்லா இருக்கே!...
X

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மனோஜ் ஒரு இன்டர்நேஷனல் ஏஜென்சிக்கு இன்டர்வியூவில் கலந்து கொள்ள வந்திருக்கிறார். அவருடன் சேர்த்து அங்கு மேலும் மூவர் அதில் கலந்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் சர்டிபிகேட் வாங்கிப் பார்க்கும் மனோஜ் அவர்களை மட்டம் தட்டிக் கொண்டிருக்கிறார்.

ஒரு கட்டத்தில் அங்கிருந்த மூவரும் எழுந்து சென்றுவிட போட்டிக்கு ஆளில்லாததால் கண்டிப்பாக இந்த வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் மனோஜ். பின்னர் மனோஜ் உள்ளே செல்ல அங்கிருந்த அதிகாரிகள் உங்கள் அப்ளிகேஷனை பார்த்த உடனே நீங்கள்தான் என முடிவு செய்துவிட்டோம் என்கின்றனர்.

இதையும் படிங்க: பணத்தை எப்படி செலவழிச்சா சந்தோஷம்னு தெரியுமா? கார்த்தி சொன்ன டச்சிங்கான விஷயம்!..

பின்னர் வீட்டில் மனோஜ் குறித்து ரோகினியும் விஜயாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இன்டெர்வியூ என பேசிக் கொண்டதால் அண்ணாமலை வேலைக்குப் போகலையா என கேட்கிறார். நல்ல வேலை கிடைக்க, அந்த வேலையை விட்டுவிட்டான் என்கிறார் விஜயா. பின்னர் மனோஜ் வந்து விஜயாவின் காதில் வேலை விஷயத்தை சொல்ல அவர் அழுது சீன் போடுகிறார்.

கடவுள் கண்ணை தொறந்துட்டான். ஆனா நீ என்கூட இல்லாம போறியே டா. அந்த சம்பளத்தை இங்கேயே கொடுக்கக் கூடாதா என கேட்கிறார். நல்ல சம்பளம் கிடைச்சா வெளியில போய் தானே ஆகணும் ஏனோ மனோஜும் அழுது சீன் போடுகிறார். இவர்கள் பேசிக்கொள்வதை பார்த்த ரோகினி என்ன ஆனது என கேட்கிறார். கனடாவில் வேலை கிடைத்து இருப்பதாக மனோஜ் கூற ரோகினிக்கு சந்தோஷம் தாங்காமல் மனோஜை கட்டிக் கொள்கிறார்.

இதையும் படிங்க: பிரேமலு ஹீரோயினை துன்புறுத்தினாரா பாலா?.. கிளம்பிய சர்ச்சை!.. மமிதா பைஜு என்ன சொன்னாங்க தெரியுமா?..

முத்துவோ இதுக்கு தான் இவ்வளவு நேரம் இந்த கூத்தா எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார். உள்ளே சென்ற அண்ணாமலையும் முத்துவும் வாய்விட்டு குலுங்கி சிரித்துக் கொண்டிருக்கின்றனர். பின்னர் ரவியை பார்க்க ஹோட்டலுக்கு வரும் ஸ்ருதியின் அம்மா எதற்காக ஆலப்புழா செல்ல மாட்டேன் என்றீர்கள் என கேட்டுக் கொண்டிருக்கிறார்.

ஆனால் ரவி இது நான் வேலை செய்யும் இடம் இன்னொரு நாள் பேசிக் கொள்ளலாம் என அவரை கிளம்ப சொல்ல ஸ்ருதியின் அம்மா தொடர்ந்து கத்திக் கொண்டே இருக்கிறார். இதனால் கடுப்பான ரவி போவது என்றால் உங்கள் பெண்ணை தனியாக போக சொல்லுங்கள் எனக் கூறிவிட்டு செல்வதுடன் இன்றைய எபிசோடு முடிந்தது.

இதையும் படிங்க: ரஜினிகாந்த் இடத்தை ராஷ்மிகா மந்தனா பிடிச்சிடுவாரு போல!.. இனிமே அவர் நேஷ்னல் கிரஷ் இல்லை!..

Next Story