ஒருவழியா முத்து ஜெயிச்சிட்டாருப்பா!... மாலையை டெலிவரி பண்ணி பல்க் அமவுண்ட் கல்லா கட்டிட்டாரே!...

by Akhilan |
ஒருவழியா முத்து ஜெயிச்சிட்டாருப்பா!... மாலையை டெலிவரி பண்ணி பல்க் அமவுண்ட் கல்லா கட்டிட்டாரே!...
X

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் முத்து மாலையுடன் வண்டி காணாமல் போன விஷயத்தை கூற தன்னுடைய நண்பருக்கு கால் செய்கிறார். ஆனால் அந்த காலை எடுக்கும் அமைச்சர் உன்னை பற்றி எனக்கு தெரிஞ்சிட்டு நீ எதிர்க்கட்சி ஆளு தானே என்கிறார். முத்து நான் எந்த கட்சியிலும் இல்லை என எத்தனை சொல்லியும் அவர் நம்ப மறுக்கிறார்.

நீ இன்னும் அரை மணி நேரத்துல மாலையுடன் இங்கே வரணும். இல்லனா நான் ரெண்டு மாலை வாங்குவேன். அதுல ஒன்னு உன் நண்பனுக்கு இன்னொன்னு உனக்கு அதை எடுத்துக்கிட்டு உன்னை தேடி வருவேன் என அமைச்சர் முத்துவை மிரட்டுகிறார்.

இதையும் படிங்க: நாங்களும் ஃபேன்ஸோட செல்ஃபி எடுப்போம்!.. அடுத்த தளபதியின் அட்டகாசங்கள் ஆரம்பம்!..

இதனால் முத்து பயத்தில் இருக்கிறார். மீனா அவருக்கு ஆறுதல் கூற முத்துவிற்கு ஒரு ஐடியா வருகிறது. காலையில் எடுத்த வண்டியின் புகைப்படத்தை தன்னுடைய நண்பர்களின் வாட்ஸ் அப் குரூப்பில் அனுப்பி இந்த வண்டியை யாரும் பார்த்தால் தனக்கு தகவல் தரும்படி மெசேஜ் போடுகிறார்.

அந்த நேரத்தில் நண்பர் ஒருவரின் வண்டியை அந்த வேன் கிராஸ் செய்ய அவர் வண்டியை பாலோ செய்து கொண்டே முத்துவிற்கு தன்னுடைய லொகேஷனை அனுப்புகிறார். அதை பார்த்த மற்ற நண்பர்களும் அந்த லொகேஷனை பாலோ செய்து குறிப்பிட்ட அந்த இடத்திற்கு வந்து ரவுடிகளை சுற்றிவழிக்கின்றனர்.

பின்னர் அவர்களை அடித்து போட்டுவிட்டு மாலையுடன் வண்டியை எடுத்துக் கொண்டு முத்து கிளம்புகிறார். பின்னர் நண்பனுக்கு கால் செய்ய அமைச்சரே போன் எடுக்க இன்னும் 20 நிமிடத்தில் மாலையுடன் வந்து விடுகிறேன் என நம்பிக்கை தெரிவிக்கிறார்.

இங்கு சிட்டியோ தன்னுடைய ஆட்களை போட்டு அடித்துக் கொண்டிருக்கிறான். என் பெயர் ஏதும் சொல்லி தொலைச்சிட்டீங்களா என அவர் பத்தி கேட்க உங்கள் பேரை சொல்லல அதற்குள் நாங்கள் தப்பித்து வந்து விட்டோம் என கூறிவிடுகின்றனர். உடனே சுற்றி இந்த முறை தப்பிச்சிட்டான். அடுத்த முறை கவனித்து கொள்ளலாம் எனக் கூறுகிறார்.

இதையும் படிங்க: கழட்டி விட்டாலும் நண்பனை மறக்கலயே!.. லோகேஷ் கனகராஜுக்கு முதல் வாழ்த்து சொன்னது யாருன்னு பாருங்க!..

முத்து மாலை எடுத்துக்கொண்டு அமைச்சர் இருக்கும் மண்டபத்திற்கு வருகிறார். உடனே அவரைப் பார்த்த அமைச்சர் கோபமாகி அவனை புடிச்சு கட்டி போடுங்கடா என கூறுகிறார். பின்னர் மாலை இருப்பதை பார்த்து நான் மிரட்டினதும் பயந்து எடுத்துட்டு வந்துட்டியா என்கிறார். பின்னர் மீனா வந்து உண்மையை சொல்லியதும் தான் அவருக்கு முத்துவின் மீதே நம்பிக்கை வருகிறது.

பின்னர் மாலை பணத்துடன் மேலும் 5,000 கொடுத்து முத்துவிற்கு எந்த உதவியாக இருந்தாலும் தன்னிடம் கேட்கும்படி சொல்லி அனுப்புகிறார். மீனா பணத்துடன் வந்து தன்னுடன் மாலை கட்டியவர்களுக்கு கொடுக்க அவர்கள் இதெல்லாம் வேண்டாம் எங்க வீட்டு பொண்ணுக்காக நாங்க செஞ்சோம் என சொல்லி அந்த காசை மறுத்துவிடுகின்றனர். இதில் மீனா சந்தோஷப்பட்டு நிற்பதுடன் இன்றைய எபிசோடு முடிந்தது.

இதையும் படிங்க: நாங்க எடுக்குற நல்ல படங்களை பாக்காதீங்க.. மஞ்சுமெல் பாய்ஸ் பாருங்க!.. சமுத்திரக்கனி காட்டம்!.

Next Story