Categories: latest newstelevision

மாட்டிக்கினாரு ஒருத்தரு!.. மனோஜால் விஜயாவிடம் வசமாக சிக்கிய ரோகினி…போச்சா?

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் வட்டிக்கு பணம் கொடுக்க வரும் சிதம்பரம் மீனாவை கடையை பார்த்து கொண்டு இருக்கிறார். அப்போ மீனா அங்கு வர அவரிடம் பேசிவிட்டு 20 ஆயிரம் வாங்குகிறார். இதை விஜயாவும் பார்த்துக் கொண்டு இருக்கிறார். 

உன் வீடுனு சொல்லி காசு வாங்குறீயா என விஜயா கேட்கிறார். அதுக்கு எனக்கு தேவை இல்லை. என் கடையை வச்சித்தான் கொடுத்தாங்க என்கிறார் மீனா. பெரிய ஆர்டரா புடிச்ச அப்புறமும் எதுக்கு காசு வாங்குற என கேட்கிறார். சீக்கிரமே தெரிஞ்சிப்பீங்க நான் ஒரு வேலையாக வெளியே போயிட்டு வரேன் என கூறிவிட்டு செல்கிறார் மீனா.

இதையும் படிங்க: இத்தனை கமல் படங்களை மிஸ் பண்ண இதுதான் காரணம்!.. வடிவேலுவைவிட நான் பாக்கியசாலி.. வையாபுரி பேச்சு!..

மீனா கார் வாங்கும் இடத்துக்கு செல்வத்துடன் செல்கிறார். காரை பார்த்து ஓகே சொல்லிவிட்டு பணத்தையும் செட்டில் செய்கிறார். பின்னர் செல்வத்தை இந்த கார் வேறு யாருக்கும் வாங்கியதாக கூறி அவரை அழைத்து வந்து பார்த்து பிடித்திருக்கிறதா என கேட்டுக் கொள்ளுங்கள் என்கிறார் மீனா.

இதை அடுத்து ரோகினி மற்றும் வித்யா பார்லரில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரம் பார்த்து மனோஜ் அங்கு வந்து விடுகிறார். அவர் பார்லரின் பெயர் மாறிய விஷயத்தையும் தெரிந்து கொள்கிறார்.  பார்லரில் வேலை செய்யும் பெண் உள்ளே வந்து ரோகினியிடம் மனோஜ் வந்திருப்பதாக கூறுகிறார்.

மனோஜ் ரோகினிடம் எதுக்கு பேர் மாத்தின என கேட்க, பெரிய பார்லர் ஒன்றுக்கு பிரான்சைஸ் கொடுத்து இருக்கேன். நானும் பார்ட்னர் தான். நிறைய லாபம் வரும் என சொல்லி சமாளிக்கிறார். அதை மனோஜும் நம்பி விடுகிறார். சரி இதை போய் நான் அம்மாகிட்ட சொல்றேன் எனக் கூறிவிட்டு செல்கிறார்.

இதையும் படிங்க: என்ன அசோக் செல்வன் இப்படி இறங்கிட்டாரு!.. வீட்ல கீர்த்தி பாண்டியன் எதுவும் கேட்க மாட்டாங்களா பாஸ்!..

இதனால் ஷாக்காகும் ரோகினி வீட்டுக்கு சென்று சமாளிக்கிறேன் என வித்யாவிடம் கூறிவிட்டு செல்கிறார். மனோஜ் வந்து வீட்டில் இந்த விஷயத்தை கூறுகிறார். இதனால் விஜயா அதிர்ச்சியானாலும் சத்தம் இல்லாமல் அந்த விஷயத்தை கடந்து விடுகிறார். அண்ணாமலை முத்துவிடம் இதுக்கு தான் உன்ன அன்னைக்கே சொல்ல வேணாம்னு சொன்னேன். பாரு உங்க அம்மா எதுவும் கண்டுக்கல எனச் சொல்கிறார்.

ரூமில் விஜயா உட்கார்ந்து இருக்க அங்கு வரும் ரோகினி என் மேல ஏதும் வருத்தமா இருக்கீங்களா எனக் கேட்கிறார். ரூமை மூட சொல்லும் விஜயா. வருத்தம் எல்லாம் இல்ல ஆனா கோபத்தில் இருக்கேன் என்கிறார். யார கேட்டு பெயரை மாத்துன. அந்த பார்லரை என் வீட்டை அடமானம் வைத்து உருவாக்கினது. முடிய வெட்டுற மாதிரி என் பேரு தூக்கி போட்டுட்டியா என சத்தம் போடுகிறார் விஜயா. இதனால் ரோகினி அதிர்ந்து நிற்பதுடன் எபிசோட் முடிந்தது.

இதையும் படிங்க:  பார்வையாலே வேட்டையாடும் வேட்டையன் ஹீரோயின்!.. பாத் டப்பில் அப்படியொரு போஸ்.. சும்மா சூடாகுதே!..

Akhilan

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

6 minutes ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

52 minutes ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

1 hour ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

3 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

9 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

10 hours ago