இத்தனை கமல் படங்களை மிஸ் பண்ண இதுதான் காரணம்!.. வடிவேலுவைவிட நான் பாக்கியசாலி.. வையாபுரி பேச்சு!..
400 படங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் நடித்த வையாபுரி கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன் லியோ படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து கதையில் மிகப்பெரிய ட்விஸ்ட்டை ஏற்படுத்தினார்.
அடுத்ததாக கவுண்டமணி நடித்து வரும் ஒத்த ஓட்டு முத்தையா படத்திலும் நடித்து வரும் வையாபுரி இயக்குநர் கே. பாலசந்தர் படங்களில் நடிக்க முடியாத வருத்தத்தை கமல் சார் படங்களில் நடித்துத் தான் போக்கிக் கொண்டேன்.
இதையும் படிங்க: என்ன அசோக் செல்வன் இப்படி இறங்கிட்டாரு!.. வீட்ல கீர்த்தி பாண்டியன் எதுவும் கேட்க மாட்டாங்களா பாஸ்!..
ராஜ்கமல் பிலிம்ஸ் என்றாலே வையாபுரி இருப்பார் என பலரும் சொல்லி சொல்லித்தான் ஒரு கட்டத்துக்கு மேல் அவருடைய சில படங்களில் நடிக்கவே முடியாமல் போய் விட்டது என வெளிப்படையாக பேசியுள்ளார் வையாபுரி.
மீண்டும் கவுண்டமணி நடிப்பில் நடிப்பது ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது. சினிமாவில் நான் எப்போதும் பீக்கில் இருந்தது இல்லை. ஆனால், வடிவேலு அண்ணன் போல சினிமாவில் இருந்து சில காலம் ஒதுக்கி வைக்கப்படவும் இல்லை.
இதையும் படிங்க: ஜெயலலிதா வாழ்க்கையில் யார் யாரோ வந்தார்கள்! பிரிய காரணம் இதுதான்.. தோழி கூறிய ரகசியம்..
பெருசா நடிக்கவில்லை என்றாலும், தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறேன். புதிய இயக்குநர்கள் படங்களில் நடிக்க ரொம்ப ஆசையாக உள்ளது. லோகேஷ் தம்பி படத்தில் விக்ரம் படத்திலேயே நடித்திருக்க வேண்டியது. மிஸ் ஆகிடுச்சு, அதனால் தான் லியோ படத்தில் அந்த கதாபாத்திரத்தை கூப்பிட்டு கொடுத்தார்.
அட்லீ தம்பி படத்தில் நடிக்க நினைத்தேன். அவர் இந்திக்கு போய் விட்டார். அவருக்கு அங்கே வரிசையாக படங்கள் காத்துக் கிடக்கின்றன. நெல்சன் இயக்கத்திலும் நடிக்க வேண்டும் என ரொம்ப ஆசையாக இருக்கு என பேசியுள்ளார்.