மீனா வாங்கி கொடுத்த காரால் பிரச்னையில் சிக்கிய ரோகினி… விஜயா நீங்க வெவரம் தான்!
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மீனாவும் முத்துவும் காரில் சென்று கொண்டிருக்கின்றனர். இருவரும் சந்தோஷமாக பேசி சென்று கொண்டிருக்கும் போது பூக்கடையை பார்க்கிறார் முத்து. அங்கிருந்த எல்லா பூவையும் வாங்கி மீனா தலையில் வைத்து விடுகிறார்.
பின்னர் மீனாவை அழைத்துக் கொண்டு கார் ஷெட்டுக்கு சென்று நண்பர்களிடம் மனைவி வாங்கி கொடுத்த கார் எனப் பெருமையாக பேசி கொள்கிறார். பின்னர் மீனாவின் பெயர் எழுத போறேன் என முத்து கூற, உங்க பெயரையே எழுதுங்க என மீனா கூற கடைசியில் பொதுவாக எம் என்ற எழுத்தை போடுகின்றனர்.
இதையும் படிங்க: என்ன சொல்ல வராரு சூர்யா?.. புறநானூறு படம் குறித்து திடீரென அறிக்கை.. அப்போ அவ்ளோ தானா?..
வீட்டில் அண்ணாமலை மனோஜை ஏதாவது நல்ல வேலைக்கு போடா என்கிறார். அவரோ எனக்கு தான் வேலை கிடைச்சிட்டேப்பா காசு கொடுத்தா உடனே ஓகே வாங்கிடலாம் என்கிறார். நீ இங்கேயே ஒரு வேலையில் முழுசா இருக்க மாட்ற இதுல கனடாவுக்கா போக போற என பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
அந்த நேரத்தில் வரும் ரோகிணி ஒரு பட்டுப்புடவை கொடுத்து மலேசியாவில் இருந்து மாமா அனுப்பியதாக பொய் சொல்கிறார். அதை பார்த்து விஜயா வாயெல்லாம் பல்லாக்கு சிரிக்க அப்பாடா சண்டை முடிஞ்சுச்சு என நிம்மதி பெருமூச்சு விடுகிறார் ரோகிணி.
அப்போ தலை நிறைய பூவுடன் மீனா வர கடையில் விற்காத பூவெல்லாம் உன் தலையில வச்சுக்கிட்டியா என நக்கல் அடிக்கிறார் விஜயா. உடனே முத்து குடும்பத்தினரை கீழே அழைத்துச் சென்று காரை காட்டுகிறார். இந்த கார் எவ்வளவு வரும் 10 லட்சம் என்கிறார் முத்து.
இதையும் படிங்க: விஜய் மகனை நம்ப மறுக்கும் ஹீரோக்கள்!.. கவின் முதல் சிவகார்த்திகேயன் வரை இத்தனை பேர் எஸ்கேப்பா?..
இதனால் விஜயா வாய் பிளக்க உடனே மனோஜ் அவ்ளோ எல்லாம் ஆகாது மா ரெண்டு இல்ல மூணு லட்சம் தான் ஆகும் என்கிறார். எவ்வளவு ஆனா என்ன என் பொண்டாட்டி அவ காசில் வாங்கி கொடுத்தது. என் பொண்டாட்டி மலேசியா இருந்தா 10 கோடிக்கு கூட கார் வாங்கி கொடுப்பா என்கிறார் முத்து.
இதைக் கேட்டு விஜயா ரோகிணியை பார்த்து முறைக்கிறார். பின்னர் ரூமுக்கு வரும் விஜயா ரோகினி இடம் பேச்சு கொடுக்கிறார். பூ கட்டிய கார் வாங்கிட்டா பாரு என அவர் சொல்ல அந்த மனோஜ்க்கு தான் ஒரு வழி பொறக்க மாட்டேங்குது என்கிறார். இதனால் ரோகினி காசுக்கு தான் பேசுறாங்களோ என அதிர்ச்சியாக நிற்பதுடன் இன்றைய எபிசோடு முடிந்தது.