Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் விஜயா மீனாவை பிடித்து வேலை வாங்கிக்கொண்டு இருக்கிறார். அப்போ அங்கு வரும் முத்து, இவளையே சொல்லுறீங்க. உங்க மத்த ரெண்டு மருமகள்கள் என்ன செய்றாங்க என்கிறார். மீனா முத்துவை வாயை அடக்குகிறார்.
உனக்காக தானே பேசுறேன் என்கிறார் முத்து. நீங்க பேசுறதுக்கும் என்னத்தான் திட்டுவாங்க. சும்மா இருங்க எனக் கூறிவிடுகிறார். பின்னர் விஜயா ரூமுக்கு சென்றுவிட முத்து, மீனா பேசிக்கொண்டு இருக்கின்றனர். முத்து, மீனா பூ வாங்கி வந்து வைத்து விடுகிறார். பின்னர் அல்வாவை எடுத்து கொடுக்கிறார். ஆனால் அந்த நேரத்தில் ஸ்ருதி வெளியில் வர எங்கு போறீங்க எனக் கேட்கிறார்.
இதையும் படிங்க:காட்டுக்குள் அஜித் என்னலாம் பண்றாரு பாருங்க!.. விடாமல் துரத்தும் விடாமுயற்சி நடிகர்!.. செம பிக்ஸ்!
இல்ல பசிக்குதுனு பிரியாணி ஆர்டர் போட்டதாக கூறுகிறார். சொல்லி இருந்தா நானே தோசை சுட்டு கொடுத்து இருப்பேன் என மீனா கேட்க இல்லை பரவாயில்லை. நீங்களும் சாப்பிடுங்க என ஸ்ருதி கூப்பிட வேண்டாம் என்கிறார். அப்போ அங்கு வரும் விஜயா, என்னம்மா செய்ற எனக் கேட்க பிரியாணி ஆண்ட்டி சாப்பிடுறீங்களா எனக் கேட்க விஜயாவும் டேஸ்டா இருக்கே எனச் உட்கார்ந்து சாப்பிடுகிறார்.
முத்து இதை பார்த்து கடுப்பாகிவிடுகிறார். பின்னர் அவர்கள் இருவரும் சாப்பிட்டுவிட்டு ரூமுக்குள் சென்று விடுகின்றனர். உள்ளே வரும் விஜயாவிடம் ஏன் லேட்டு என அண்ணாமலை கேட்க பிரியாணி சாப்பிட்டதாக சொல்கிறார். வயிறு ஒத்துக்குமா என அண்ணாமலை சொல்ல எனக்கு உங்களை விட 9 வயது கம்மி. கல்லை கூட கரைச்சிடுவேன் என்கிறார்.
இதையும் படிங்க: காட்டுறதை காட்டுறேன்!.. பார்க்குறதை பார்த்துக்கோ!.. வாஜி வாஜி சிவாஜி பாட்டுல போட்ட டிரெஸ்ஸா இது?..
பின்னர் அல்வா சாப்பிடலாம் என மீனா டேபிளில் வைத்து விட்டு தட்டை எடுக்க போக அப்போ வரும் மனோஜ் அல்வாவை எடுத்து ரோகினியை அழைத்து ஊட்டி சாப்பிட வைக்கிறார். இதை பார்த்த முத்து வெறியாகிவிடுகிறார்.
அவர்கள் சென்றுவிட சரி பேசலாம் எனப் பார்க்க விஜயா மூச்சு அடைப்பதாக வெளியில் வந்துவிடுகிறார்.
பின்னர் காலை வரை அப்படியே உட்கார்ந்து வலிக்குது எனப் புலம்பிக்கொண்டே இருக்கிறார். பார்வதியும் வந்து முதுகில் குத்தி பார்க்க வலி குறைவதாக இல்லை. ரோகினி ஹாஸ்பிட்டல் போகலாம் எனக் கூறிவிடுகிறார். ஸ்ருதி இருங்க நான் குத்தி பார்க்கிறேன் என வருவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.
இதையும் படிங்க: ஒருவழியா அடுத்து மாலினிக்கு முடிவு கட்ற நேரம் வந்துடுச்சு போல!… தப்பிச்சோம் டா!…
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…