முத்துவை வச்சு பெருசா ப்ளான் போடும் ஸ்ருதி குடும்பம்… நடக்குமா? ரோகினி மாட்டுவாங்களா இல்லையா?

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் விஜயா மூச்சு விட முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறார். அப்போ ஸ்ருதி நான் அடிக்கிறேன் என வருகிறார். உடனே ரவி சும்மா நில்லு. உன்னால தான் பிரச்னை என அவரை பிடித்து நிறுத்துகிறார்.

தொடர்ந்து பார்வதி குத்தி பார்க்க சரியாகவே இல்லை. இதனால் முத்து அப்பா பாட்டி இதுக்கு ஒரு வைத்தியம் சொல்லுவாங்க. பெரிய உலக்கையை எடுத்து அப்படியே ஒரு போடு போட்டா சரியாகிடும் என்கிறார். இதைக்கேட்டு விஜயா அதிர்ச்சியாகி எழுந்து நிற்க ஏப்பம் வந்துவிடுகிறது.

இதையும் படிங்க: லேட்டா வந்த ரஜினிகாந்த்!.. பளார் விட்ட பாரதிராஜா!.. இளையராஜா அதுக்கு மேல அந்த மேட்டரை தொடலையாம்!..

இதை தொடர்ந்து ஸ்ருதியின் அம்மா வீட்டுக்கு வருகிறார். அண்ணாமலை ரிட்டயர்ட் பங்ஷனில் முத்து சண்டை போட்டாரு. அவரு நிகழ்ச்சிக்கு வரது சரியா இருக்காது. வரக்கூடாது என்கிறார் ஸ்ருதியின் அம்மா. உடனே விஜயாவும் அதற்கு ஓகே சொல்லிவிடுகிறார். பின்னர் அண்ணாமலை வெளியில் போய் விட்டு வர அவரை ஓவராக உபசரிக்கிறார் விஜயா.

இதனால் சந்தேகமாகி என்னவென்று கேட்க, முத்து வரக்கூடாது என்பதை சொல்கிறார் விஜயா. உடனே அண்ணாமலையும் சரி அவன் வர வேண்டாம் என்கிறார். இதனால் விஜயா சந்தோஷப்பட மீனா என்ன மாமா நீங்களே இப்படி சொல்லிட்டீங்க என்கிறார். அண்ணாமலை உறுதியாக சொல்லிவிடுகிறார். பின்னர் ரவி வர பங்ஷனுக்கு முத்து வரலை. அதனால் நானும் வரலை என்கிறார்.

இதையும் படிங்க: என்னால பாட முடியாது!. கமலால் மட்டும்தான் முடியும்!.. எஸ்.பி.பி.யையே மிரள வைத்த பாடல் எது தெரியுமா?..

மீனா நானும் வரலை எனக் கூறிவிடுகிறார். ரோகினி, அவர் வந்தா சண்டை போடுவாரு. நீங்க ஏன் அங்கிள் வரலை எனக் கேட்கிறார். ரவி, ஸ்ருதி அதிர்ச்சியாகி விட பின்னர் எல்லாரும் வந்தா நானும் வருவேன் என அண்ணாமலை கறாராக சொல்லிவிடுகிறார். உடனே விஜயா பின்வாங்க எல்லாரும் போவதாக பேசி முடிக்கின்றனர்.

இதையடுத்து ஸ்ருதி அம்மாவுக்கு கால் செய்து வீட்டில் நடந்த விஷயத்தினை கூறிவிடுகிறார் விஜயா. அவரும் எங்க மரியாதைக்கு பிரச்னை வரக்கூடாது எனக் கூறிவிட்டு போனை வைக்கிறார். ஸ்ருதியின் அப்பாவிடம் ப்ளான் சக்ஸஸ் அந்த முத்துவை வச்சு சண்டை போட்டு அந்த வீட்டில் ஸ்ருதி இருக்க கூடாதுனு அழைச்சிட்டு வந்துடுவேன் எனக் கூறுவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

Related Articles
Next Story
Share it