Categories: latest newstelevision

இதல்லவோ குடும்பம்… விஜயாக்கு பல்ப் மேல பல்பா கிடைக்குதே.. செம எண்டர்டெயின்மெண்ட் கியாரண்டி மக்கா!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மீனா ஆர்டருக்காக எல்லாரும் அமர்ந்து பூக்கட்டி கொண்டு இருக்கின்றனர். அவர்களிடம் பேசிக்கொண்டு இருக்கும் அண்ணாமலை விஜயாவை போய் டீ போட்டு எடுத்து வரச் சொல்கிறார். இதனால் கடுப்பாகும் விஜயா சமையலறைக்கு சென்று பார்வதிக்கு கால் செய்து வரச் சொல்கிறார்.

பார்வதி வர என்ன வீடே மணக்குது எனச் சொல்லிக்கொண்டு இருக்கிறார். அண்ணாமலை 500 மாலைக்கு ஆர்டர் கிடைத்து இருக்கு, அதுக்கு கட்டிக்கிட்டு இருக்காங்க என்கிறார். ஆமா பெரிய கார் டெலிவரி என விஜயா கலாய்க்க, முத்து உங்க பையன் போய் கனடாவில் டெலிவரி பண்ணுவான் என்கிறார்.

இதையும் படிங்க: இரவோடு இரவாக கேப்டன் செய்த வேலை!.. ஆடிப்போய் சத்தியராஜ் செய்த காரியம்…

அடுத்து, பார்வதியையும் மாலை கட்ட சொல்கிறார். உடனே விஜயாவிடம் அத்தைக்கும் டீ போட்டு வருமாறு கூறுகிறார். பார்வதி சக்கரை தூக்கலா எடுத்துட்டு வா எனச் சொல்ல விஜயா காண்டாகி விடுகிறார். ஸ்ருதி டப்பிங் பேசிக்கொண்டு இருக்க அவருக்கு சாப்பாடு வந்திருப்பதாக கூறுகின்றனர். அவர் குழப்பத்துடன் உள்ளே சென்று பார்க்க ரவி சமைத்து எடுத்து வந்து இருக்கிறார்.

இருவரும் கிளம்பி வீட்டுக்கு வர ஸ்ருதி என்ன வீடே கோயில் மாதிரி இருக்கு என்கிறார். மீனா வந்தப்பையே கோயிலா ஆகிட்டு என அண்ணாமலை சொல்கிறார். இதை கேட்ட விஜயா அப்போ நாங்க இருந்தப்ப எப்படி இருந்துச்சாம் எனக் கேட்க பேய் பங்களா மாதிரி இருந்ததாக நக்கலடிக்கிறார் முத்து.

இதையும் படிங்க: சுருளிராஜன் சொன்ன அட்வைஸ்!.. அப்படியே ஃபாலோ பண்ண சத்தியராஜ்.. இது செம மேட்டரு!..

ஸ்ருதி நானும் பூக்கட்டுறேன் என மீனாவிடம் கேட்டுக்கொண்டு இருக்கிறார். ஆனால் அவருக்கு கட்டத்தெரியாமல் போக அண்ணாமலை சரி விடுமா எல்லாருக்கும் எல்லாம் வராது என்கிறார். அதெல்லாம் இல்ல அங்கிள். மீனா டப்பிங்கே நல்லா பேசி இருக்காங்க என்கிறார். ரோகினி, மனோஜ் ஒரு பக்கம் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

மனோஜை மாலையெல்லாம் போட்டோ எடுக்க சொல்கிறார் அண்ணாமலை. பின்னர் சாப்பாட்டுக்கு என்னவென்று பேச ரவி தானே சமைப்பதாக கூறுகிறார். மாவெல்லாம் இல்லை எனக் கூற மனோஜை காசு கொடுத்து வாங்கி வரச் சொல்கிறார். அண்ணாமலையும் சொல்ல ரோகினி ஒன்னும் சொல்ல முடியாமல் நிற்பதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

இதையும் படிங்க: ஒரு படம் ஓடுனதுக்கு இந்த சீன் தேவையா? கவினால் கடுப்பான முன்னணி இயக்குனர்!..

Akhilan

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

11 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

12 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

12 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

14 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

20 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

21 hours ago