இதுல ஹீரோயின் ரோகிணியா? சந்தேகமடையும் ரசிகர்கள்… ஓவர் ஹைப் ஏத்தும் டைரக்டர்…

by Akhilan |
இதுல ஹீரோயின் ரோகிணியா? சந்தேகமடையும் ரசிகர்கள்… ஓவர் ஹைப் ஏத்தும் டைரக்டர்…
X

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மனோஜ் மற்றும் ரோகிணி இருவரும் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு வருகின்றனர். வாசலில் நிற்க வைத்து விஜயா ஆரத்தி எடுக்கிறார். முத்து கலாய்க்க ரோகிணி வீட்டுக்குள்ளே வரதுக்குள்ள முத்து ஆரம்பிச்சிட்டாரு என்கிறார்.

ஹாலில் வந்து உட்காரும் மனோஜ் வாயை வலிக்குது என புலம்ப இன்னைக்கு நிறைய பேசுனேன் எனக் கூற முத்து, ஸ்ருதியை பார்த்து பலகுரல் ஒருநாளைக்கே இப்படியாம். அப்போ உனக்கு வலிக்காதா எனக் கலாய்க்க எனக்கு பழகிடுச்சு. நான் பிடிச்சு பண்றேன். அதான் வேகேஷன் போற மாதிரி இருக்கு என்கிறார்.

இதையும் படிங்க: கார்த்தியோட ஆசை நடிகராவதே இல்லையாம்… அப்புறம் எப்படி ஹீரோவானாரு தெரியுமா?

மனோஜ் தூங்கி விழுக ரோகிணி முதல்நாள் என்பதால் நிறைய வேலை இருந்ததாக ரூமுக்கு அழைத்து செல்கிறார். போன உடனே மனோஜ் படுத்துவிட சாப்பிட கூட எழுந்திரிக்காமல் படுக்கிறார். ரோகிணி வந்து வெளியில் போய் படுக்க அழைக்க மனோஜ் வராமல் அடம் பிடிக்கிறார். பின்னர் ரோகிணியும் நாம் ஏன் போகணும் என உட்கார்ந்துவிடுகிறார். அப்போ முத்து வந்து கதவை தட்ட ரோகிணி தெனாவெட்டாக திறக்கிறார்.

இதையும் படிங்க: ஒரு சீன் கூட நல்லா இல்லை!.. ஹிப் ஹாப் ஆதியின் PT சார் படத்தை முடித்து விட்ட ப்ளூ சட்டை மாறன்!..

மாடிக்கு வரும் முத்து, மீனாவிடம் மன்னிப்பு கேட்க அதெல்லாம் விடுங்க. எனக்கு இப்படி இருக்கது தான் பிடிச்சு இருக்கு என்கிறார். காலையில் ரெடியாகி வரும் ரோகிணி மனோஜை எழுப்ப அவர் நகராமல் தூங்கிக்கொண்டு இருக்கிறார். வீட்டில் இருப்பவர்கள் மனோஜ் தூங்குவதை பார்த்து கடுப்பாகின்றனர். பின்னர் விஜயா வந்து சின்ன குழந்தையை எழுப்புவது போல எழுப்பிக்கொண்டு இருக்க அதை முத்து கடுப்புடன் பார்த்துகொண்டு இருப்பதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

Next Story