ஓவர் சீனா இருக்கே… மனோஜ் மற்றும் ரோகிணியால் கடுப்பாகும் ரசிகர்கள்… அடி வாங்கும் டிஆர்பி…
Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் விஜயா ரோகிணிக்கு உடனே தாலி செயின் வாங்கி போடணும் என்கிறார். ஆனால் அண்ணாமலை அதை அவன் புருஷன் வாங்கி கொடுப்பான். நீ சும்மா இரு எனச் சொல்லி செல்கிறார். இதையடுத்து ரோகிணியிடம் வரும் விஜயா நீ இப்படியே இருப்பியாம்மா.
உங்க அப்பா வந்தா எங்களை என்ன நினைப்பாரு. கேஸ் நடக்குது இப்ப வர மாட்டாரு ஆண்ட்டி என்கிறார். வரும்போது நல்லாவா இருக்கும். நான் கீழ் வீட்டில் அட்வான்ஸ் கொஞ்சம் காசு வாங்கிருந்தேன். அது கழிஞ்சிட்டு. அவங்களிடம் கொஞ்சம் வாங்கிக்கலாம். நீ அடகு வச்ச நகையை மீட்டுக்கலாம் எனக் கூறுகிறார். ஆனால் ரோகிணி அதெல்லாம் வேண்டாம் ஆண்ட்டி என்கிறார். நீ இப்படி பெருந்தன்மையா சொல்லுற. ஆனா சிலதுங்க இந்த வீட்டில் புடுங்கிறதுக்கே வந்து இருக்குங்க.
இதையும் படிங்க: ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது!.. அல்லு அர்ஜுனுக்கு அல்லு இல்லை!.. புஷ்பா 2 நிலைமை இப்படி ஆகிடுச்சே?
அப்போ அங்கு வரும் ஸ்ருதி யாரை ஆண்ட்டி சொல்றீங்க என்கிறார். நான் பொதுவா சொன்னதா விஜயா கூற நீங்க மீனாவை தானே சொல்றீங்க. காசை இவங்க திருப்பி கொடுத்ததுக்கு மீனா எப்படி பொறுப்பாவாங்க. அந்த காசை எங்க மம்மி கொடுக்க வேண்டாம்னு சொல்லியும் கொடுத்தது ரோகிணி தான். தப்பு அவங்க மேல வச்சிக்கிட்டு மீனாவை குறை சொல்லாதீங்க என்கிறார். பார்லர் கிளம்பி வரும் ரோகிணி வித்யாவிடம் சொல்லி இந்த கயிறு தான் என்னை காப்பாத்தும். மனோஜ் மற்றும் என் மாமியாருக்கு கில்டியா இருக்கும். அதை வச்சு கொஞ்ச நாள் நிம்மதியா இருப்பேன் என்கிறார்.
மீனா காய்ச்சலாக இருக்க அதை பார்க்கும் முத்து வா ஹாஸ்பிட்டல் போகலாம் என்கிறார். ஆனால் மீனா மறுத்து விட சரி ரூமில் படுத்துக்கோ. நான் மாத்திரை வாங்கி வருகிறேன் எனக் கூறி செல்கிறார். இந்த கேப்பில் மனோஜ் மற்றும் ரோகிணி வர தூங்க போவதாக ரூமுக்குள் செல்கிறார். மீனா படுத்து இருப்பதை பார்த்து மனோஜ் விஜயாவிடம் வத்தி வைக்கிறார். அந்த நேரத்தில் அண்ணாமலையும் வர அவ டயர்டா இருப்பதால் படுத்து இருப்பா. எழுப்பாதே எனக் கூறிவிட்டு செல்கிறார்.
இதையும் படிங்க: பின்வாங்குற பேச்சுக்கே இடமில்லை!.. அதிரடி காட்டும் தனுஷ்.. ராயன் படத்தின் மாஸ் அப்டேட் இதோ!..
ஆனால் விஜயா நேராக மீனாவை போய் எழுப்புகிறார். இன்னைக்கு முன்னவே வந்து ரூமை பிடிச்சிட்டியா எனக் கேட்க உடம்பு சரியில்லாததால் ரெஸ்ட் எடுத்ததாக கூறுகிறார். நீயெல்லாம் ஜெனரல் வார்டில் தானே இருக்கணும். இங்க என்ன ஸ்பெஷலா கேட்குது என மீனாவை இழுத்து வர அங்கு முத்து நிற்கிறார். மனோஜ் நான் நாள் முழுதும் உழைச்சிட்டு வரேன். என்னால் வெளியில் படுக்க முடியாது. எனக்கு ரூமை கொடுத்துடுங்க என்கிறார். ரோகிணியும் நானும் கிளையண்ட்டிடம் நின்னுட்டே வரேன் என்கிறார்.
ரெஸ்ட் நீ வந்து ஹாலில் படுக்க வேண்டியது தானே எனக் கேட்க என்னோடது கிரியேட்டிவிட்டி வேலை. எவ்வளோ பேசணும் தெரியுமா? உன்னை மாதிரி ஒரு இடத்தில் உட்கார்ந்து கார் ஓட்டலை என்கிறார். ரவி இரண்டு நாளைக்கே வா. எந்த வேலையும் கேவலமானது இல்லை எனப் பேசுகிறார். ரோகிணி உங்க டர்னுக்கு நீங்க படுக்கும் போது தான் தெரியும் என்கிறார். நான் ரவியை அழைச்சிக்கிட்டு என் வீட்டுக்கு போயிடுவேன் என ஸ்ருதி கூற விஜயா அதிர்ச்சி அடைகிறார்.
மனோஜ் அதான் சரி. அப்போ நாங்களும் ஒரு வாரம் வெளியில் தங்கிவிட்டு வருவதாக கூறுகிறார். விஜயா பதறி துடிக்க அண்ணாமலை இந்த ரூம் பிரச்னை பெரிசா போகுதே என்கிறார். மீனா இன்னைக்கு நீ அத்தையோட அந்த ரூமில் படு. நானும், முத்துவும் அந்த ரூமில் படுத்துக்குறோம் என்கிறார். மனோஜ் எனக்கு ரூம் எனக் கேட்க எங்களோட படுத்துக்கோ என்கிறார் அண்ணாமலை. அப்போ ரோகிணி எனக் கேட்க அவ அம்மாவோட படுத்துக்கட்டும் எனக் கூறிவிடுகிறார். பின்னர் விஜயா ரூமில் மீனா வர ரோகிணியை கேட்கிறார். அதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.
இதையும் படிங்க: இனிமே எவனாச்சும் பாடி ஷேமிங் பண்ணுவானா?.. ஒரேயடியாக உடம்பை குறைத்த மஞ்சிமா மோகன்!..