சோறு, சண்டை, காசு!.. ஒரே கதையை வச்சு உருட்டும் சிறகடிக்க ஆசை..! இப்படியே போனா என்ன ஆகுறது..?

by Akhilan |
சோறு, சண்டை, காசு!.. ஒரே கதையை வச்சு உருட்டும் சிறகடிக்க ஆசை..! இப்படியே போனா என்ன ஆகுறது..?
X

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் வீட்டில் சாப்பிடாமல் வரும் முத்து தலைவலி தாங்க முடியாமல் தொடர்ச்சியாக டீ குடித்து கொண்டு இருக்கிறார். செல்வம் இதுக்கு ஒழுங்கா சாப்பிட்டு விட்டே வந்து இருக்கலாம் தானே எனத் திட்டுகிறார்.

அந்த நேரத்தில் அங்கு மீனா வகையாக சமைத்து கொண்டு வருகிறார். ஆனால் முத்து எனக்கு வேண்டாம். அவளை போக சொல்லு என்கிறார். இதையடுத்து எல்லாருக்கும் தான் கொண்டு வந்திருக்கேன் என உட்கார்ந்து பரிமாற தொடங்குகிறார்.

இதையும் படிங்க: இமான் பிரச்சனைக்கு பிறகு முதன்முறையாக வீட்டை விட்டு வெளியே தலை காட்டிய சிவகார்த்திகேயன்.. செம போட்டோ!

நண்பர்கள் அனைவரும் கொஞ்சம் கொஞ்சமாக வழிக்கு வந்து மீனாவின் சமையலை அடித்து துவம்சம் செய்து கொண்டு இருக்கின்றனர். மீனா போகும் போது முத்துவுக்கு சாப்பாடு வைத்து விட்டு செல்கிறார். அவர் கிளம்பியதும் தனக்கு வைத்த சாப்பாடை சாப்பிட்டு விடுகிறார் முத்து.

இதையடுத்து வீட்டுக்கு வரும் மனோஜை அழைத்து 25 ஆயிரத்தினை கொடுக்கும் விஜயா இப்போ இதான் முடிந்தது. சீக்கிரம் ஒரு வேலையை தேடிக்கொள் என்கிறார். சரி சரி என சமாளித்துவிட்டு மனோஜ் ரோகினியிடம் காசை கொடுக்கிறார்.

இப்படி தான் எப்பையும் கேட்டா தான் கிடைக்கும். இன்சென்ட்டிவ், பொங்கல் போனஸ் எல்லாம் கேட்டுக்கொண்டு இரு என்கிறார். இதில் ஷாக்கான மனோஜ் வெளியில் கிளம்பி விடுகிறார். இதையடுத்து பிஏவுக்கு கால் செய்து 50 ஆயிரம் இல்லை 25 ஆயிரம் தான் இருக்கு.

இனி எனக்கு கூப்பிடாதே என்கிறார். இந்த மாசத்துக்கு ஓவர். இது தீர்ந்தப்பின் கால் செய்வேன் எனச் சொல்லி விட்டு போனை வைக்கிறார். இதையடுத்து அண்ணாமலைக்கு மாத்திரை கொடுத்து கொண்டு இருக்கிறார் அப்போ அண்ணாமலையின் அம்மா கால் செய்கிறார்.

இதையும் படிங்க: பசங்க பிரச்சனை பண்ணாலும் தப்பெல்லாம் பொண்ணுங்க மேலயா?!.. பாக்கியாவுக்காக களத்தில் இறங்கிய ராதிகா!..

அவர் முத்து மற்றும் மனோஜ் தம்பதிக்கு இது தலை தீபாவளி என்பதால் காசு அனுப்பி இருக்கேன் என்கிறார். இதையடுத்து அண்ணாமலையை ஊருக்கு கூப்பிடுகிறார். இப்போ வேணாம் பொங்கலுக்கு வருவதாக கூறுகிறார். இதையடுத்து ரவிக்கு பெண் பார்த்து இருக்கேன். மீனா மாதிரி நல்ல பொண்ணு என்கிறார்.

இதையடுத்து விஜயா மீனா பத்தி சொல்ல வேண்டி தானே. ரவி ஓடிப்போன விஷயத்தினை சொன்ன அம்மா தனியா இருக்காங்க. அதுக்கான நேரம் வரும் என சொல்லி அனைவரின் வாயை அடைக்கிறார். முத்து கடுப்பாவதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

Next Story