latest news
அழுது புலம்பிய மீனாவுக்கு சரியான அட்வைஸ் கொடுத்த அம்மா..! ஸ்ருதி ஆசையை கெடுத்த ரவி..!
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் சீதாவை போட்டு அவரது அம்மா அடித்து துவைக்கிறார். ஏன் இப்படி ஏமாத்துன? உன்னால மீனா வாழ்க்கைக்கும் பிரச்னை. எனக்கு அவ வாழ்க்கையை நினைச்சா தான் கவலையா இருக்கு என்கிறார்.
அப்போது அங்கு மீனா அழுது கொண்டு வருகிறார். வீட்டுக்கு வந்து நான் தான் இந்த கல்யாணத்தினை செஞ்சி வச்சேனு சொல்றாங்கம்மா. என்ன சுத்தி என்ன நடக்குதுனே தெரியலை. என்ன வீட்டுக்குள்ளவே வரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அவரும் என் முகத்துல முழிக்காதனு சொல்லிட்டாரு என்று அழுது புலம்புகிறார்.
இதையும் படிங்க: எம்ஜிஆரை இதுவரை இப்படி யாரும் புகழ்ந்திருக்க மாட்டாங்க! போட்டி இருந்தாலும் உண்மையான பாசத்தை காட்டிய கலைஞர்
இதனையடுத்து, ரவி வருத்தமாக பால்கனியில் நிற்கிறார். அங்கு வரும் ஸ்ருதி உன்னை எப்படி சமாதானம் செய்யணும் என எனக்கு தெரியும் எனக்கூறி ஸ்வீட், பூவும் வாங்கி வரச் சொல்கிறார். ஆனால் ரவி தன்னுடைய குடும்ப நிலைமையை நினைத்து வருந்துகிறார். இதில் மீனா வாழ்க்கையை என்னால் பிரச்னை எனவும் கூறி வருத்தப்பட எல்லாம் சரியாகும் என சமாதானம் செய்கிறார் ஸ்ருதி.
இதையடுத்து நமக்குள் இப்போ எதுவும் வேணாம் எனக் கூறி ஸ்ருதியும் சரியென சொல்லி விடுகிறார். அடுத்து ஸ்ருதி அப்பா, அம்மா வருத்தமாக பேசிக்கொண்டு இருக்கின்றனர். அங்கு வரும் பிஜூவும் அப்பாவும் வந்து வாசுதேவனை திட்டுக்கின்றனர். நீ எதுக்கு இன்னும் உயிரோட ஏன் இருக்க. தூக்கு மாட்டிட்டு சாக வேண்டியது தானே என அவமானப்படுத்துகிறார்.
நான் இந்த கல்யாணத்திற்காக 5 லட்சம் ரூபாய் செலவு பண்ணி இருக்கேன். அந்த பணத்தை கொடு எனக் கூறி மிரட்டி செக் வாங்கிக்கொண்டு கிளம்புகிறார். இனிமேல் என் முகத்திலேயே மிதிக்காத என்று சொல்லிவிட்டு செல்கிறார். பிஜூ அந்த ஸ்ருதியை இனி சும்மா விடமாட்டேன் என கோபப்படுகிறார்.
இதையும் படிங்க: சைக்கோவா நீ…! மாலினி செய்த வேலையை பார்த்து கடுப்பான ரசிகர்கள்..! அதுக்கு தான் வெறும் பெட்டு போல..!
அதையடுத்து மீனாவின் அம்மா இப்படியே அழுதுக்கிட்டு இருக்கக்கூடாது. இங்கையே நீ இருந்தால் தப்பு உன் மீது என ஆகிடும். உன் வீட்டுக்கு போ அங்க போய் அழுது புலம்பு. உன் பக்கம் நியாயத்தை எடுத்து சொல்லு. உங்க மாமாகிட்ட மன்னிப்பு கேளு எனக்கூறி அனுப்பி வைக்கிறார். அவர் கிளம்பியதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.