Connect with us

latest news

மீண்டும் கல்யாணம் செய்து கொண்ட முத்து – மீனா… கடுப்பில் ரோகினியை மாட்டிவிடும் விஜயா…

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் மீனா, முத்து தயாராக இருக்க அய்யர் வந்து தாலியை எடுத்து கொடுக்கிறார். முத்து என்னது நான் கட்டிக்கணுமா? இதெல்லாம் இந்த ஊர்ல பழக்கம் கிடையாது எனக் கலாய்க்கிறார். என் கழுத்துல கட்டுங்க எனத் திட்டுகிறார் மீனா. அதான் கழுத்துல இருக்கேன் என முத்து கேட்க அது அவசரத்துல நடந்தது என்கிறார் மீனா.

மீனாவின் அம்மாவும் முதல் தடவை கல்யாணம் நடக்கும் போது விருப்பமில்லாம தான் நடந்தது. அதனால முழு மனசோட திரும்பவும் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்பட்டா அதான் இந்த ஏற்பாடு என்கிறார்.  முத்துவும் நானும் அப்படித்தான் அப்பா சொன்னாங்கன்னு தாலி கட்டிட்டேன். மீனா முகத்தை கூட முழுசா பார்க்கல என்று கூறுகிறார். இப்போ உன்னை என் பொண்டாட்டியா முழு மனசோட ஏத்துக்கிட்டு தாலி கட்டுறேன் என்கிறார் முத்து.

இதையும் படிங்க: ஏலியனை நம்பி ஏமாந்துப் போன சிவகார்த்திகேயன்!.. அனுமானை நம்பி அஜித் வசூலையே வீழ்த்திய இளம் ஹீரோ!..

அதை தொடர்ந்து, முத்து சந்தோஷமாக மீனாவின் கழுத்தில் தாலி கட்டுகிறார். அனைவரும் அசீர்வாதம் செய்கின்றனர். மாலையும் கழுத்துடன் போனா அப்பா ரொம்ப சந்தோஷப்படுவார் என்று கூறி வீட்டுக்கு வருகின்றனர். இதை பார்த்து அண்ணாமலை சந்தோஷமாக என்ன விஷயம் எனக் கேட்க கல்யாணம் பண்ணிக்கிட்ட விஷயத்தை கூறுகின்றனர். 

கல்யாணம் ஒரு முறை தான் பண்ணிப்பாங்க இவங்க என்ன திரும்பத் திரும்ப பண்ணிக்கிறாங்க. அப்போது முதல்ல நடந்தது என்ன பொம்மை கல்யாணமா? உடனே முத்து ஆமாம் பொம்மை கல்யாணம் தான். அதான் இப்போ ரெண்டு பேரும் முழு மனசோட காதலோட கல்யாணம் பண்ணிக்கிட்டோம் என்று முத்து கூறுகிறார். மனோஜ் இவங்களுக்கு தான் ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு எத்தன முறை கல்யாணம் பண்ணுவாங்க என்று கலாய்க்கிறார்.

இதையும் படிங்க: இங்க ஜெயிக்கிறதை விட நிக்கிறது கஷ்டம்!.. புகழுக்கு மேடையிலேயே அட்வைஸ் பண்ண சூரி!..

நீ உங்க அப்பாக்கிட்ட பேசிட்டியா நிறைய செய்வாரு எனச் சொல்ல ஷாக் ஆகிறார் ரோகினி. பின்னர் மாமாவிடம் பேசிட்டேன். அப்பாக்கிட்ட சொல்றதா சொல்லி இருக்காங்க என்கிறார். அடுத்து கிச்சனில் சமைத்துக் கொண்டு இருக்கும் மீனா அங்கு வரும் விஜயா என்ன வெறுப்பேத்துறதுக்கு தானே முத்துவை கூட்டிட்டு போய் தாலி கட்டிட்டு வந்த என்கிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது. 

google news
Continue Reading

More in latest news

To Top