மாமா வருவாரா? மாட்டாரா? ரொம்ப ஜவ்வா இழுக்குறாங்களே!... விஜயா பல்ப் வாங்குனா எப்படி இருக்கும்?

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் பாட்டி எல்லாருக்கும் ஊட்டிவிட சொல்ல விஜயா கடுப்பாகிவிடுகிறார். இருந்தும் மாமியார் பேச்சை தட்ட முடியாமல் மூன்று மருமகளுக்கு ஊட்டுகிறார். முதலில் ஸ்ருதி, ரோகினிக்கு சரியாக ஊட்டியவர் மீனாவுக்கு அப்பிவிடுகிறார்.
இதனால் பாட்டி என்ன இப்படி ஊட்டுற எனக் கேட்ட அப்புறம் சரியாக ஊட்டிவிடுகிறார். பின்னர் எல்லாரும் ரூமுக்கு சென்று விடுகின்றனர். மனோஜ் உன் ரூமே பெருசா இருக்கும். உனக்கு கஷ்டமாக இருக்கா எனக் கேட்கிறார். ரவியும் ஸ்ருதியும் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.
இதையும் படிங்க: சிவாஜியை பல மணி நேரம் காக்க வைத்த சரோஜா தேவி!. டிராப் ஆன திரைப்படம்!..
உங்க பாட்டியும் உங்க அண்ணனும் ஒன்னு என்கிறார். ரெண்டு பேரும் வெள்ளந்தி என ரவிக்கூற எது உங்க அண்ணனா என கவுண்டர் கொடுக்கிறார். வந்ததுலேந்து கடுப்பேத்திக்கிட்டு இருக்காரு என ஸ்ருதி குற்றப்பத்திரிக்கை வாசித்துக்கிட்டு இருக்கிறார். வெளியில் அண்ணாமலை, விஜயா, முத்து, பாட்டி இருக்க மீனா பூக்கட்டி கொண்டு இருக்கிறார்.
அப்போ பேச்சு பூக்கடை பக்கம் செல்ல பார்லர் ஓகே பூக்கடை வச்சு என்னை அவமானப்படுத்தி விட்டாங்க எனப் புலம்புகிறார் விஜயா. நாளைக்காச்சும் ரோகினி மாமா வருவாரா? அத சொல்லியே என்னை வெளியில் போக விடாம பண்ணிட்ட என்கிறார் அண்ணாமலை.
இதையும் படிங்க: 2023-ல் ஹீரோக்களை ஓவர்டேக் செய்த டாப் 3 வில்லன்கள்!.. கெத்து காட்டிய பஹத் பாசில்…