மீனா இந்த விஷயத்துல நம்பிட்டாங்கப்பா!... அடுத்து சத்யா மேட்டரை ஓபன் பண்ணிடுங்கப்பா…

by Akhilan |   ( Updated:2024-03-05 00:29:30  )
மீனா இந்த விஷயத்துல நம்பிட்டாங்கப்பா!... அடுத்து சத்யா மேட்டரை ஓபன் பண்ணிடுங்கப்பா…
X

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மீனா முத்துவின் செட்டுக்கு வந்து அவர் கார் விற்ற விஷயம் குறித்து செல்வத்திடம் கேட்கிறார். செல்வமும் சத்யா விஷயத்தினை தவிர சிட்டி மிரட்டி காரை எடுத்து விடுவேன் இல்லை என்றால் முத்து காலில் விழ வேண்டும் எனக் கூறிய விஷயத்தினை கூறிவிடுகிறார்.

இதனால் கடுப்பாகும் மீனா நேராக சிட்டியை வந்து பார்த்து என் புருஷன் உன் காலில் வேண்டுமா? கந்து வட்டிக் கொடுப்பவரை என் புருஷன் அடித்த அடியில் அவர் இப்போ ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கிறார். நீ எல்லாம் அவர் கால் தூசிக்கு சமம். இதோட நிறுத்திக்கோ இல்ல நானே தெருவில் விட்டு செருப்பால் அடிப்பேன் என மிரட்டி விட்டு செல்கிறார்.

இதையும் படிங்க: கலியுகத்தில் ஒரு ராமராம்!.. விஜய் தேவரகொண்டாவின் ஃபேமிலி டீசர் ஒருவழியா ரிலீஸ்!.. படம் ஓடுமா?..

இதைத்தொடர்ந்து சிட்டியுடன் இருக்கும் ஆட்கள் என்ன அண்ணா உங்களை பார்த்து மற்றவர்கள் பயப்படுவார்கள். இவங்க இப்படி பேசிட்டு போறாங்க நீங்க அமைதியா இருக்கீங்க என கேட்கின்றனர். சத்யா நம்ம கூட தானே இருக்கான் அவனை வைத்து இவளையும், இவ புருஷனையும் பிரித்து விடலாம் என பேசிக்கொள்கின்றனர்.

பின்னர் வீட்டில் ரோகினிடம் 14 லட்சம் ரூபாய் வாங்கி கொடுக்க சொல்கிறார் மனோஜ். கனடா வேலைக்கு சென்று பெரிய பெரிய வீடு வாங்குவேன் என அளந்து விட்டுக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் மனோஜின் பார் நண்பர் வீட்டுக்கு வருகிறார். அவர் ரோகினியை பார்த்து தன்னிடம் கடன் வாங்கிய விஷயத்தை போட்டு உடைத்து விடுகிறார்.

இதனால் கடுப்பாகும் ரோகினி இன்னும் எத்தனை விஷயத்தை என்னிடம் மறைத்து வைத்திருக்கிறாய். இன்னும் யாரெல்லாம் என்னிடம் பணம் கேட்டு மெரட்ட போறீங்க எனக்கு ஒரு மனோஜ் வேற யாரும் மிரட்டுகிறாங்க என கேட்கிறார். இதை தொடர்ந்து ரோகினி மனோஜை திட்டிவிட்டு ரூமுக்குள் சென்று விடுகிறார்.

இதையும் படிங்க: மகனை மெஸ்ஸியாக்காம விடமாட்டாரு போல அஜித் குமார்!.. கோல்டன் ஃபுட்பால் கேக் வெட்டி கொண்டாட்டம்!..

Next Story