அய்யா நீங்க உண்மைய சொல்றதுக்குள்ள காசெல்லாம் மனோஜ் கரைச்சிடுவாரு போலயே!
Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் மனோஜ் மற்றும் ரோகிணி கார் வாங்கிக்கொண்டு வருகின்றனர். நேராக வீட்டுக்குள் செல்லாமல் விஜயாவுக்கு கால் செய்து கார் வாங்கிய விஷயத்தினை கூறுகிறார். பின்னர் ஆரத்தி எடுக்க வருமாறு அழைக்கிறார். அவரும் சந்தோஷத்தில் எல்லாரையும் அழைத்து கொண்டு கீழே வருகிறார்.
அண்ணாமலை எதுக்கு இப்போ இந்த காரு எனக் கேட்க பிசினஸ் பண்ணப்போறேன். நாலு பேரை பார்த்து பேசப் போணும். அப்போ ஆட்டோல, பஸ்ல போனா நல்லாவா இருக்கும். அதான் கார் வாங்கிட்டு வந்தேன் என்கிறார். எவ்வளோ கொடுத்த என முத்து கேட்க நாலு லட்சம் என்கிறார். முத்து காரை சுத்திப் பார்த்து 2 அல்லது இரண்டரை லட்சத்துக்கு தான் போகும் என்கிறார். மனோஜ் நான் விசாரித்து தான் வாங்கினேன் என்கிறார்.
இதையும் படிங்க: இந்த படம் ஓடவே ஓடாது!.. நம்பாமல் விஜயகாந்த் நடித்த படம்!. அட சூப்பர் ஹிட் ஆச்சே!..
ரவி என்ன பிசினஸ் செய்ய போறே என்கிறார். அதெல்லாம் இனி மேல் தான் யோசிக்கணும் எனக் கூறுகிறார் மனோஜ். பின்னர் மனோஜிடம் ரவி ட்ரீட் கேட்கிறார். பீர் வாங்கித்தரேன் எனக் கூற ஆளுக்கு ஒன்று என மூன்று பீரை வாங்கிக்கொண்டு மாடிக்கு செல்கின்றனர். முத்து எனக்கெல்லாம் எதுவும் வேணாம். நான் குடிக்காதப்பயே என்னை வச்சி செஞ்சீங்க. இன்னைக்கு குடிக்கிற மூடில் நான் இல்லை என்கிறார்.
பின்னர் என்ன பிசினஸ் செய்யலாம் என்ற பேச்சு வருகிறது. அப்போ ரவி ரெஸ்டாரெண்ட் திறக்க சொல்ல மத்தவன் நாக்கை நம்பி திறக்க முடியாது. கார் வாங்கி டிராவல்ஸ் வச்சிடு என முத்து கூற அடுத்தவன் சொகுசா போறதுக்கு நான் பிசினஸ் வைக்கணுமா? இருக்க இடத்துலயே இருக்கணும். ஆனா நிறைய சம்பாரிக்கணும் என்கிறார். அப்போ நீ கோயில் வாசல பிச்சை தான் எடுக்கணும் என்கிறார் முத்து. கீழே மூன்று பேரும் டீ குடித்து பேசிக்கொண்டு இருக்க ஸ்ருதி ஸ்டுடியோ ஆரம்பிச்சிடுங்க என்கிறார்.
அதுக்கு நிறைய செலவாகும். மீனா அப்போ பெரிய பூக்கடை வச்சிடுங்க என்கிறார். எங்களுக்கு தகுந்த வேலையை சொல்லுங்க என்கிறார் ரோகிணி. ஸ்ருதி அவருக்கு என்ன தெரியும் எனக் கேட்க காசை நல்லா மேனேஜ் செய்வான் என்கிறார். ஓ அங்கிள் ரிட்டயர்மெண்ட் பணத்தை பண்ணாரே அப்படியா என ஸ்ருதி கலாய்க்கிறார். மேலே இருக்கவங்க எதுவும் முடிவெடுப்பாங்க என்கிறார் ரோகிணி. ஸ்ருதி அவங்க குடிக்கப் போயிருக்காங்க.
இதையும் படிங்க: அலைகள் ஓய்வதில்லை படத்தை 500 முறை பார்த்த இயக்குனர்… விஜயகாந்த் செய்த மறக்க முடியாத உதவி!
நான் ரவிக்கு ஒரு பீர் குடிக்க பெர்மிஷன் தந்து இருக்கேன் என ஸ்ருதி கூற நானும் அதான் கொடுத்து இருக்கேன். ஆனால் முத்துவுக்கு நிறைய குடிக்கலாம். பெர்மிஷன் கேட்க வேண்டிய அவசியமும் இல்ல என்கிறார் ரோகிணி. மீனா அவர் குடிக்க மாட்டாரு எனக் கூற பார்க்கலாம் தள்ளாடிக்கிட்டு தான் வருவாரு என்கிறார் ரோகிணி. ஸ்ருதி ரவிக்கு கால் செய்து இன்னும் முடியலையா என்கிறார். அவர் இதோ கிளம்பிவிட்டோம் எனக் கூற, ரோகிணியும் மனோஜ்க்கு கால் செய்கிறார்.
மனோஜ் போதையில் கீழே செல்வதற்கு பதில் மாடியில் இருந்து குதிக்க போக முத்து அவரைப் பிடித்து கீழே அழைத்து வருகிறார். முத்துவை முதலில் பார்க்கும் ரோகிணி நான் சொன்னேன்ல. இதோ தள்ளாடிக்கிட்டு வராரு என்கிறார். அடுத்து மனோஜை பிடித்து முத்து மற்றும் ரவி தூக்கி வர ஸ்ருதி உங்க ஹஸ்பெண்ட்டை தான் தூக்கிட்டு வராங்க எனப் பல்ப் கொடுக்கிறார். பின்னர் ரோகிணி அடித்து ரூமுக்கு அழைத்து செல்கிறார். ரவியும் ஸ்ருதியும் ரூமுக்கு சென்றுவிட நீங்க எவ்வளோ குடிச்சீங்க என மீனா கேட்க முத்து நான் குடிக்கலை என்பதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.